Friday, May 11, 2012

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்

உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை



உணவில் கூட உதவி செய்யாத உலகில் உதவிக்கு நீட்டும் கரத்தை கண்டு
வியந்து நிமிர்ந்து பார்க்கிறான்....
பார்த்ததும் காதல் போல பார்த்ததும் நட்பு....
இரண்டு அண்டாவை கவுத்தி வைத்து ஒரு சொம்பை தலையாக வைத்த உருவமாய் வந்து நின்றான் விவேக்...
சற்று அதிர்ந்தே பார்த்தான் விஜய்...
"என்ன பார்க்குற ??? ஒரு ஆளுக்கு ஒரு டோகேன் தான் தராங்க அதான் உனக்கும் சேர்த்து வாங்கி நான் சாப்பிடலாம்னு நெனச்சேன்.....வாங்கிட்டு வா அங்க போய் உட்காரலாம்..."
இருவரும் நல்ல இடத்தில் காற்றாடிக்கு அருகில்அமர்ந்தனர்...
விஜய் விவேக் உண்பதை பார்த்து கொண்டே இருந்தான்...
"அப்புடி பார்க்காத அப்புறம் என் வயித்துல ஒட்டாது...இந்தா நீயும் சாப்பிடு" என்றான்....
இருவரும் தங்களை பற்றிய வரலாறுகளை பகிர்ந்து கொள்கின்றனர்....
"டேய் நம்மலா கிராமத்துல இருந்து வர்றோம்...இங்க எல்லாரும் நம்மட்ட நல்லா பேசுவான்களா டா????" என்றான் விவேக்.....
"அதெல்லாம் பார்த்துக்கலாம் மாப்ள....அன்பா பழகுனா எல்லாருக்கும் புடிக்கும் டா" என்றான் விஜய்...."ஐயோ!! டேய் இப்புடி தத்துவம் பேசுனா எவனும் மதிக்க மாட்டான் டா...என்ன கொடும காத்திருக்கோ இன்னைக்கு classல..."
இருவரும் வகுப்பிற்கு செல்கின்றனர்....
திடீர் என்று விஜய் கால் தடுமாற கீழே பார்க்கிறான்...
ஒரு மொபைல் போன்....
"டேய் காலேஜ் வந்த மொத நாளே இப்புடி ஒரு நல்ல மொபைல் கிடைச்சிருக்கு டா உனக்கு" என்றான் விவேக்
"சும்மா இரு டா...யார் இதுன்னு தெரிலயே டா..." எம்று சுத்தி முத்தி பார்த்தான் விஜய்....
திடீரென்று அந்த மொபைல் போன் ஒலித்தது "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்..." என்று ஒலித்தது அந்த ரிங்டோன்..


அடுத்த பாகத்தை படிக்க...


1 comment:

Kanmani Rajan said...

அருமையான ஆரம்பம். எனக்குப் பிடித்த பாடல், பேசுகிறேன் பேசுகிறேன் :)