உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
அருகில் வந்த ராகவன் "நீ தமிழ் MEDIUM SCHOOL ல இருந்து வரியா ??" என்றார் .
"ஆமா SIR " என்று தயக்கத்துடன் கூறினாள் .
"இங்க பாரு மா... நீ தமிழ்ல படிச்சு வந்திருக்கலாம் ஆனா இங்க எல்லாம் ENGLISH தான்...போக போக கத்துக்கணும்....இல்லான நல்ல வேலைக்கு போக முடியாது ...புரிஞ்சதா??? " என்றார் ராகவன்.
"சரி SIR" என்றாள் யுவஸ்ரீ .
"டேய் அவளும் தமிழ் MEDIUM டா...கலக்கு " என்று சற்று கத்தி பேசிவிட்டான் விவேக்.
"WHO IS THAT SPEAKING IN MY CLASS ???" என்று கூறி விவேக்கை நோக்கி பார்த்தார் ராகவன்.
"SORRY SIR" என்றான் விவேக் .
"WHAT IS YOUR NAME ?/ INTRODUCE YOURSELF.." என்றார் ராகவன் .
"என் பேரு விவேக் சார் ... ஊர் உசிலம்பட்டி..." என்றான் விவேக்..
"இங்க பாருங்க டா உசிலம்பட்டி உருளை .." என்று ஒருவன் COMMENT அடித்தான்..
"SILENCE" என்றார் சிறிது கோபத்துடன் ராகவன் ..
"இங்க எத்தன பேரு தமிழ் MEDIUM??? GET UP " என்றார் ராகவன்..
விவேக் , விஜய் , யுவஸ்ரீ போக இன்னும் நான்கு பேர் எழுந்தனர்...
தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்த உயிர்கள் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை...
என்று எண்ணிக்கொண்டான் விஜய்..
"இங்க பாருங்க...தமிழ் நமக்கு தாய் மொழி தான்.... ஆனா அதுக்காக நான் ENGLISH படிச்சது இல்ல....படிக்க பிடிக்கல ..... எனக்கு புரியாது.... நம்மால முடியாதுனு நெனைக்க கூடாது ...YOU CAN DO ANYTHING IF YOU TRY ...OK? ஒழுங்கா முயற்சி பண்ணீங்கன்ன " என்ன வேணும்னாலும் பண்ணலாம் ....OK?
" என்றார் ராகவன்...
"OK SIR" என்றனர் அனைவரும்...
ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்....
"OKAY STUDENTS....TOMORROW WE WILL SEE THE LESSONS..." என்றார் ராகவன்..
அனைவரும் எழுந்து நின்றனர்....
மீண்டும் அந்த சலசலப்ப்பும் கலகலப்பும் நிறைந்த சந்தை ஆனது அந்த வகுப்பறை...
"இவரு நல்ல பேசுறார் டா...நல்லா பாடம் நடத்துவார்னு தோணுது" என்றான் விவேக்...
"டேய் தமிழ் புலவர்களா....சொல்லுங்கடா உங்கள பத்தி..." என்றான் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுன்...
"என் பேர் விவேக் இவன் பேரு விஜய்...ரெண்டு பெரும் உசிலம்பட்டி பக்கத்துல இருந்து வர்றோம்..." என்றான் விவேக்..
"அதான் உங்க மூஞ்சிலே எழுதிருக்கே..." என்றான் அர்ஜுன்...அனைவரும் சிரித்தனர்...
கோபம் கொண்டான் விஜய்.....
"டேய் ..." என்று கத்தினான்.....அமைதி பரவியது வகுப்பில்...
அடுத்த பாகத்தை படிக்க...
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
2 comments:
:) ம்ம்.. நல்லா போகுது கதை :) காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு. :)
நாலுல ஒரு பங்கு இல்ல...
நல்ல தமிழ் பேசுகிறவர்கள், நாற்பது கோடியில் ஒரு பங்குதான் உயில் எழுதும் நிலையில் உயிர் வாழ்கின்றனர்... நண்பா...
Post a Comment