உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
அமைதி பரவிய அந்த வகுப்பறையில் அனைவரும் விஜயை உற்று நோக்கி விட்டு பின் அவரவர் வேலையை தொடர்ந்தனர்....
"ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க டா...நானும் ENGLISH படிச்சிருக்கேன்.....உனக்கு TAMIL எந்த அளவுக்கு தெரியுமோ அந்த அளவுக்கு எனக்கு ENGLISH தெரியும்....தமிழ் நாட்ல இருக்குற எனக்கு தமிழ் நல்ல தெரிஞ்ச போதும் டா...சும்மா ENGLISH ENGLISH பேசாதீங்க டா....JAPAN நாட்ல இருக்குறவனுக்கு நம்மல விட ENGLISH கம்மியாத்தான் தெரியும்...ஆனா அங்க தான் டா பயங்கரமா முன்னேறி இருக்காங்க..எப்புடி பேசுரோம்குறது தான் டா முக்கியம் ...எந்த மொழி னு இல்ல...." என்று கூறி தமிழ் பெருமூச்சு விட்டான் விஜய்...
"எப்பா சாமி ...போதும் டா...ஏன்டா எங்கள எல்லாம் வில்லனாக்குற??? சும்மா கலாய்ச்சோம்டா..பெருசா எடுத்துக்காத டா...SORRY ...நம்மலா ஒரே CLASS டா..." என்று கூறி தோழமையோடு தட்டினான் விஜயின் தோளில் முன் அமர்ந்திருந்த அர்ஜுன்....
"டேய்...அப்புடியே உனக்கு ஒரு CHARACTER குடுத்தாலும் VILLANல இல்ல... உனக்கு COMEDIAN தான்.." என்று கூறி குலுங்கி சிரித்தான் விவேக்...
"டேய்..புடிங்க டா அந்த அண்டாவ..." என்று கத்தி சற்று கூச்சலுடன் ஆரவாரத்துடன் கத்திக் கொண்டிருந்தனர்....
ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என BELL ஒலிக்க மீண்டும் மயான அமைதி நிலவியது....
"ஏன்டா இவ்ளோ அமைதியாயுடீங்க திடீர்னு??????" என்று சற்று அமைதியான குரலில் கேட்டான் விவேக்..
"டேய் அண்டா அமைதியா இரு ...இப்ப ENGLISH CLASS......JAILER வருவாரு..." என்றான் முன் இருந்த அர்ஜுன்...
"JAILERஅ?? யாரு டா?" என்றான் விஜய்...
"டேய்..அவரு தான் டா நம்ம ENGLISH PROFESSOR...ரொம்ப STRICT ...அவருக்கு நம்ம SENIORS வெசிருக்குற பேரு JAILOR..." என்றான் அர்ஜுன்...
அனைவரும் எழுந்தனர்....அர்ஜுன் சொன்னது போல கையில் கம்பாக ஆங்கில புத்தகத்தை ஏந்திக்கொண்டு மூக்கில் வழுக்கி விளையாடும் கண்ணாடியுமாக கன்னத்தில் சிறு மருவுடன் ஒரு JAILOR போன்றே தோற்றமளித்தார் பேராசிரியர் பாலன்..
"GOOD MORNING EVERYONE...LETS NOT WASTE THE TIME BY INTRODUCING EVERYONE...WE WILL KNOW EACH OTHER WHEN THE COURSE GOES ON...." என்று கூறி கரும்பலகை அருகில் சென்றார்...
"என்னடா இவரும் நம்ம பேர கேட்டு ஒட்டிடுவார்னு பார்த்த என்னமோ GOES ON அப்புடி இப்புடின்னு சொல்றாரு...அப்புடின என்னது டா?? " என்றான் நமது அண்டா..
"ஹ்ம்ம்...உன்ன பத்தி தெரிஞ்சு நேரத்த WASTE பண்ண வேணாம்னு சொல்றாரு....மூஞ்ச பார்த்தே தெரிஞ்சுகுவாராம்...." என்றான் விஜய்..
NOUN ...இதுவே JAILOR (பேராசிரியர் பாலன்) எழுதிய வார்த்தை....
"YES ...N-O-U-N ...NOUN...WHAT IS MEANT BY A NOUN???" என்று கூறி தன் மூக்கில் வழுக்கிய கண்ணாடி வழியாக கழுகு பார்வை பார்த்து யுவஸ்ரீயை நோக்கி கை நீட்டினார்...
திடுக்கிட்ட யுவஸ்ரீ ஆந்தை போல முழித்தாள்...
"டேய் மாப்ள உன் ஆள் செத்தா டா" என்றான் அண்டா
"போடா டேய் அவ நல்ல பொண்ணு...பாரு கண்டிப்பா பதில் சொல்லிடுவா..."
என்றான் விஜய்...
"அப்போ உன் ஆள்னு ஒத்துகுரியா?? " என்றான் முன் இருக்கையில் அர்ஜுன் அருகில் அமர்ந்திருந்த வினோத்...
"டேய் சும்மா இருங்க டா....அவரு பார்துற போறாரு.." என்றான் விஜய் சிறிய வெட்கம் உதிக்கும் சிரிப்புடன்...<3
....
"WHAT THE HELL ARE YOU DOING??? TELL ME THE ANSWER....WHAT IS MEANT BY NOUN???" என்று கத்தினார் பாலன்....
"SIR....
அடுத்த பாகம் படிக்க..
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
2 comments:
:) "டேய் மாப்ள உன் ஆள் செத்தா டா" என்றான் அண்டா
"போடா டேய் அவ நல்ல பொண்ணு...பாரு கண்டிப்பா பதில் சொல்லிடுவா..."
என்றான் விஜய்...
"அப்போ உன் ஆள்னு ஒத்துகுரியா?? " என்றான் முன் இருக்கையில் அர்ஜுன் அருகில் அமர்ந்திருந்த வினோத்...
"டேய் சும்மா இருங்க டா....அவரு பார்துற போறாரு.." என்றான் விஜய் சிறிய வெட்கம் உதிக்கும் சிரிப்புடன்...<3
:) :) lovely :) :D eeee
thanks kanmani....:)
Post a Comment