இயற்கையில் சோதனை.,
செயற்கையில் சாதனை.,
மாந்தர் கையில் வேதனை...
சாதித்ததா?
சோதிக்கிறதா?
அறிவியலின் சிந்தனை...
வான் தொட்ட கட்டிடங்கள்.,
நில நடுக்கத்தின் அடித்தளமோ??
உன் பச்சை உணவை.,
அறிவியலுக்குப் பகிர்ந்தாய்.,
உன் உணவாய் அறிவியல் விளங்குமோ??
பெருமை கொண்டாய்.,
அறிவியலின் சாதனைகளில்.,
சிறுமை கொண்டாய்
கருணை சிந்தனைகளில்.,
விண்ணைத் தொட்ட சாதனை..,
விரைவில்.,
மண்ணைத் தொடும் சோதனை..
எத்தனை இயந்திரம்???
எத்தனை படைப்பு???
எத்தனை சாதனை??
வியக்கிறேன்.,
இயற்கை இயல்பை.,
இயந்திர இயல்பாக்கும்
அறிவியலை.,
அனைத்தும் சாத்தியமாம்
விஞ்ஞான உலகில்...
மனிதனாய் மட்டும் வாழ
இடமில்லை!!!
இந்த அறி(ழி)வுலகில் !!!!
No comments:
Post a Comment