Thursday, May 10, 2012

பெருமை கொள்கிறேன்...

கருவில் சுமக்காது
கண்கள் கலங்காது
கடமைகள் தவறாது
கண்ணும்கருத்துமாய் காத்தாய்

அறிவுரைகள் கூறவில்லை
அறிவை புகுட்டவில்லை
அன்பின் அரவணைப்பில்
அறன் வழியில் அழைத்துச் சென்றாய்

தேவைகள் தேங்காது
நோய்கள் அண்டாது
நினைவுகள் கலையாது
நிரந்தர காவலனாய் நிறைந்தாய்..

கதைகள் பல பேசினாலும்
கவிதைகள் பல எழுதினாலும்
பாடல்கள் பல பாடினாலும்
உனது ஒரு வார்த்தையில் தோற்கடித்தாய்...

உன் அன்பு மொழிக்கு
நான் என்றும் அடிமை...
அதை கட்டிக்காப்பது
என் கடமை...

என் வாழ்க்கை வழங்கி
என்னை வாழ வைத்து
வெற்றியும் பெறச்செய்தாய்!!

நண்பனாய் நகைத்து
அன்னையாய் அரவணைத்து
கடவுளாய் என்னை காக்கும்
என் தந்தையே!!!

உன்னை கடவுளாய் போற்றுவதில்
பெருமை கொள்கிறேன்...
உன்னை தந்தையாய் பெற்றதில்
பெருமை கொள்கிறேன்...

♥ ♥ ♥ ♥ ♥

1 comment:

Unknown said...

very touchy....gr888 job