உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
“உங்களுக்கு எங்கள விட அனுபவம் ஜாஸ்தி ...நிறையா படிச்சிருக்கீங்க....எங்கள
நல்ல படிங்கனு என்கரேஜ் பண்ணுங்க சார்.....உயிரை வாங்குறோம் அப்புடி இப்புடினு
திட்டாதீங்க சார்...எங்களுக்கு இருக்குற கொஞ்ச நம்பிக்கையும் போயிரும் சார்...” என்று
தாழ்மையுடன் கூற வகுப்பே மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது....
அனைவரும் JAILOR என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்த வேளையில் ஒலித்தது அந்த மணி J...
“HOW DARE YOU TALK LIKE THIS TO ME???....YOU HAVE TO STUDY
BY YOURSELF….SHOW YOUR TALENT IN COMING INTERNAL EXAM …DON’T SHOW IN SPEECH….” என்று கோபத்தில் கத்திவிட்டு கையில் இருந்த CHALKPIECEஐ தூக்கி
எறிந்துவிட்டு சென்றார்....
“டேய் உனக்கு ஏன்டா இந்த பொழப்பு???? பேசாம இருக்க வேண்டிதான?? ஏன்டா
அவருக்கு அட்வைஸ் பன்னி பிரச்சன பண்ற?? ” என்றான் விவேக்
“டேய் போடா...இதெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது...எனக்கு
தோனுச்சு சொன்னேன்...என்ன பன்னுவார்னு பாக்கலாம்..” என்று கூறிவிட்டு யுவஸ்ரியை
நோக்கினான் விஜய்....
இன்னும் அழுதுகொண்டே இருந்தாள் யுவஸ்ரீ...
சட்டென்று எழுந்து யுவஸ்ரீ அருகே சென்றான் விஜய்..
“என்னங்க நீங்க அவரு சொல்றதுக்குலா போய் பீல் பண்ணிட்டு
இருக்கீங்க....நீங்க எவ்ளோ நம்பிக்கையா பேசுனீங்க....இப்ப இப்புடி அழுறீங்க..மொத
நாளே இப்புடி அழலாமா???.” என்று கூறினான் விஜய்..
அவள் விஜயின் பேச்சை கேட்டாவாறு கண்களை துடைத்தாள்...
“அப்போ ரெண்டாவது நாள் அழலாமா???” என்று கலைத்துவிட்டதாக எண்ணி
சிரித்துக்கொண்டான் விவேக்..
அழுகையில் புதைந்து போன அந்த போன பொன் சிரிப்பு மெலிதாக பூத்தது அவள்
உதட்டில்...
புத்த புன்னகை மலர் விஜயின் மனதில் காதல் மணத்தை பரப்பியது...
இருவரும் புன்னகை பரிமாற்றதுடன் விடைபெற்றுக்கொண்டனர்...
“இதழின் ஒரு ஓரம் சிரித்தாள் அன்பே..” என்று பாடிக்கொண்டே விஜயை
பார்த்தான் விவேக்...
வெட்கம் கொட்ட சிறித்து தள்ளினான் விவேக்...:)
“பாருடா வெட்கத்த.....” என்று ஓட்ட ஆரம்பித்தான் விவேக்...
இருவரும் மதிய உணவு கொள்ள வெளியேறினர்....
1 comment:
வெட்கம் கொட்ட சிறித்து தள்ளினான் விவேக்...:)
siruchadhu vijay uh vivek uh??
Post a Comment