Saturday, October 27, 2012

உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்






அந்த ஒலியை கேட்டதும் அவன் இதயம் துடிப்பதை கேட்டான்...அவளின் MESSAGE ஆக இருக்க வேண்டும் என்று கும்பிட்டு போனைப் பார்த்தான்

"விவேக்" என்ற பெயரை கண்டதும் FUSE போன BULB போல வாடினான்..
"enna da olunga veedu poi sernthiya?" என்று இருந்த message கண்டு சற்று கோபப்பட்டான்...

டிங் டிங் ...மீண்டும் அந்த ஒலி....

switch போட்டதும் எரியும்  0 வாட்ஸ் bulb போல பிரகாசித்தது விஜயின் முகம் 
யுவஸ்ரீயின் பெயர் கண்டு :) :) :)  

"GOOD MORNING pa...am also happy...saaptiya?" என்று இருந்தது அந்த வரிகள்...

சிறிது கொண்டே "naan saapiten...nee?" என்று அனுப்பினான்...

"innum illa ...inimel thaan " என்றாள்...

"seekiram saapidu ...ivlo late aaguthu" என்று அக்கறையோடு அனுப்பினான்...

"டேய் விஜய் ...இந்தா டா அப்பா உனக்காக பழம் வாங்கி வந்திருக்காங்க ...வந்து சாப்பிடு டா " என்று அம்மா கூப்பிட்டாள்..

"வர்றேன் மா ...." என்று கூறிவிட்டு..கீழே சென்றான்..

"வா பா college நல்லா இருக்கா?? சாப்பாடு எல்லாம் சரியா சாபுடுரியா??" என்று அக்கறையோடு கேட்டார் தந்தை

"எல்லாம் நல்ல இருக்கு பா..." என்று கூறினான் நிறைந்த புன்னகையுடன்...

"அப்புறம் நல்லா படி பா...இல்லான எங்கள மாதிரி கஷ்ட பட வெச்சுடுவாய்ங்க....நம்ம நாலு பேருக்கு வேல குடுக்கணும்....நல்லா படி பா" என்று தந்தை தன் மந்திர வார்த்தைகளை போதிக்க
கையில் இருந்த போனை பார்த்து கொண்டிருந்தான்...
அது மீண்டும் யுவஸ்ரீ பெயரை உச்சரிக்க..


"எம்மா சாப்பாடு எடுத்து வெச்சு கால் மணி நேரம் ஆச்சு...என்ன மா பண்ற?? சீக்கிரம் சாப்பிட வா " என்று தன் தந்தையின் குரல் தான் யுவஸ்ரியின் விழிகளை போனில் இருந்து எடுத்தது...

"என்ன புள்ள college லா எப்புடி போகுது??" என்று தந்தை கேட்க..
புன்னகையுடன் "நல்ல போது அப்பா.." என்றாள் யுவஸ்ரீ...

இருவரும் அவரவர் சொந்த ஊரில் இருந்தாலும் ...
இருவரின் இதயமும் இணைந்தது குறுந்தகவலில் தான் :)


தொடர்ந்து படிக்க....

உயிர்- பாகம் - 15 - கைபேசியில் கைதாகி இருந்தது...

1 comment:

Soundarya Smiley said...

next uyir epo??