உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்தும்
உயிர் - பாகம் 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உயிர் -பாகம் 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....
உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்உயிர் - பாகம் 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உயிர் -பாகம் 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்
நாட்களும் நகர்ந்தது....குறுந்தகவலும் தனிமைச் சிரிப்பும் தான் அவர்களது விடுமுறை நாட்களின் தோழன்...
அவ்வப்போது விவேக் வந்து விஜயிடம் தேர்வு பயத்தை தெளித்து விடுவான்...
நாட்கள் கடந்தது அறியாதவர்களாய் கைபேசியின் சிறையில் அடைபட்ட இரண்டு குருவிகளுக்கும் சற்று பயம் கொள்ளத் தொடங்கினார்கள்..
"நான் hostel போக போறேன்..இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு...ரொம்ப பயமா இருக்கு...அங்க போனா சாதனா கூட சேர்ந்து படிப்பேன்" என்று ஒரு புறா அவன் கைபேசியில் சிறகடித்து...
"டேய் நம்மளும் hostel கெளம்புவோம் டா.." என்று விவேக்கிடம் சொன்னான்..
"சரி" என்று இருவரும்ன் மீண்டும் hostel சென்றனர்..
இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது முதல் பொறியியல் தேர்வு...
hostel வெறிச்சோடி இருந்தது....
கல்லூரி நாட்களில் காலையில் வாளிகள் போட்ட தாளம்...
இன்று குழாயில் சிந்தும் தண்ணீரின் ஓசை மட்டும் தான்...
அனைவரும் தேர்வுக்கு முந்தய நாள் தான் வருவார்கள்....
அனால் இவர்களோ சிறகு முளைத்தும் பறக்க கற்றுக் கொள்ளாத தமிழ் மீடியம் பசங்க என்ற எண்ணம் அவ்விருவருக்கும்,....
HOSTEL வந்து சேர்ந்ததும் "வந்து விட்டேன்" என்று யுவஸ்ரியின் கைபேசியில் calling bell அடித்தான்...
எந்த கதவும் திறக்க வில்லை...
"மச்சான் குளிசுட்டேன் ...வா டா சாப்பிட போலாம்....மெஸ் காலியா இருக்கும் டா....நல்லா சாபிடலாம்..." என்று விவேக் வந்து விஜயை எழுப்பினான்...
"எனக்கு பசிக்கல டா...நீ போ.." என்றான் விஜய்
"பசிக்கலையா??? இல்ல மெசேஜ் வரலையா???" என்று ஓட்ட விவேக்கை அடித்தபடி எழுந்தான் விஜய் ...
சாப்பிடும் போதும் கைபேசியை தான் அவன் கை பிசைந்தது,.....
சாப்பிட்டு விட்டு இருவரும் அறைக்கு சென்றனர்...
"ஹப்பா!!!!! அந்த fan போடு டா......நல்லா தூங்கனும் டா...."
என்று விவேக் கட்டிலில் விழுந்தான்...
"டேய் படிக்குறதுக்கு தான டா ..இவ்ளோ சீக்கிரம் கெளம்பி வந்தோம்...இங்க வந்து இப்படி படுத்துட்டா என்ன டா அர்த்தம்??? " என்று விஜய் சொல்ல...
"டேய் டேய் அடங்கு டா... நீ எப்புடியும் மெசேஜ் வராம படிக்க மாட்ட...அது வரைக்கும் உன் ஓட்ட ரேடியோ வ நான் கேக்க மாட்டேன் பா....மெசேஜ் வந்ததும் எழுப்பு...."
என்று கூறியபடி கண்ணுக்கு திரை இட்டான் விவேக்...
விஜய் படிக்க வேண்டும் என்று புத்தகம் எடுத்து அமர்ந்தான்....
ஆனால் அவன் மனமோ கைபேசியில் கைதாகி இருந்தது...
சரியாக செயல் பட்டது ஒன்று அந்த அறையின் கடிகாரம் தான்....
இரவு 7 மணி.... இன்னும் எந்த பதிலும் இல்லை....சற்று வெறுப்பும் சோகமும் படித்து அவன் முகத்தில் எழுதிக்கொண்டான்....
தொடர்ந்து படிக்க...
No comments:
Post a Comment