Thursday, May 17, 2012

உயிர் - பாகம் 4 - தமிழில் அறிமுகம்


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்





விஜய் பார்த்த அந்த முதல் கண்கள் யுவஸ்ரீயின் கண்கள். பார்த்ததும் சிறிய பூரிப்புடன் தயக்கத்துடன் உதட்டை வளைத்தான். அவள் சற்று பயந்து தலை குனிந்தாள் . ஏமாற்றம் அடைந்த விஜய் விவேக்குடன் வகுப்பிற்குள் சென்று கடைசி பெஞ்ச்சில் அமர்ந்தான் . அவளோ முதல் பெஞ்சு . 

"என்னடா அவ போன் எடுத்து கொடுத்திருக்கோம். கொஞ்சம் சிரிச்ச என்ன டா?? என் டா இப்புடி இருக்காங்க??" என்றான் விஜய் விவேக்கிடம் .

"ஆமா இவரு பெரிய கமல ஹாசன்.இவர பார்த்ததும் சிரிக்கணும். விடரா இந்த பொண்ணுங்களே இப்படித்தான்" என்றான் விவேக் .

சலசலப்பும் கூச்சலும் நிறைந்த அந்த வகுப்பறையில் திடீர் அமைதி. அனைவரும் எழுந்து நின்றனர் .அப்போது தான் வகுப்பிற்குள் நுழைந்தார் பேராசிரியர் ராகவன் . நல்ல இளமையான தோற்றத்துடன் தோன்றினார் அவர்.

"GOOD MORNING  MY DEAR STUDENTS!!! I AM RAGHAVAN. YOUR MATHS PROFESSOR. I HAVE FINISHED M.PHIL MATHEMATICS. I HAVE FIVE 5 YEARS OF EXPERIENCE. I"LL BE YOUR MATHS PROFESSOR FOR TWO SEMESTERS . இன்னைக்கு மோதல் நாள் இன்னைக்கே SUBJECT போக வேணாம். LET ALL OF YOU INTRODUCE ABOUT YOURSELF ". என்று தன் முன்னுரையை முடித்தார் ராகவன் .

"மாப்ள என்னடா மொத நாளே எதோ ENGLISH படம் பார்த்த மாதிரி இருக்கு...எப்புடி டா சமாளிக்க போறோம்???" என்றான் விஜய்.
"சும்மா இரு டா..எவனாவது எதாவது சொல்லுவான். அத பார்த்து அப்புடியே சொல்லிடுவோம்.."என்றான் விவேக் ."ஏன்டா TAMILல பேச கூடாத???" என்றான் விஜய் ..

"GOOD MORNING! I AM SAADHANA . I AM COMING FROM CHENNAI . I HAVE SECURED 1105 IN TWELFTH STANDARD. " என்று மூச்சி விடாமல் பேசினாள் முதல் பெஞ்சில் யுவஸ்ரீக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சாதனா .

"GOOD AND NEXT " என்றார் ராகவன் .
"மாப்ள உன் ஆள் டா" என்று கூறி சிரித்தான் விவேக்.
"சும்மா இரு டா அண்டா" என்று கூறினான் விஜய்

"என் பேர் யுவஸ்ரீ . நான் மதுரை ல இருந்து வர்றேன் . நான் 12TH ல 1139 மார்க் வாங்கிருக்கேன் ." என்று செந்தேன் சொட்ட தமிழில் தன்னை அறிமுகம் செய்தாள் யுவஸ்ரீ .

அவள் தன் உரையை முடித்ததும் சிறிது கிண்டல் சிரிப்பும் சலசப்பும் பரவியது .
"SILENCE" என்று கத்தினார் ராகவன் .

தன் இருக்கையில் இருந்து எழுந்து யுவஸ்ரீ அருகில் சென்றார் ராகவன் .....

அடுத்த பாகம் படிக்க...

உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM

4 comments:

Christopher J said...

Nice post so far in this story...keep it up bro!

Unknown said...

thanks da
!!

Kanmani Rajan said...

:) செந்தேன் சொட்ட தமிழில் தன்னை அறிமுகம் செய்தாள் யுவஸ்ரீ kalakkal :)

Unknown said...

thanks kanmani