இதழ் விரித்த தாமரை பூவாய்
கண் திறக்கும் குழந்தையின் உதட்டில்
நள்ளிரவில் பிறை சூடும் நிலவாய்
பிள்ளை பெரும் அன்னையின் உதட்டில்
பிள்ளை தவளும்போது சிதறும் மொட்டாய்
தோளில் ஏந்தும் தந்தையின் உதட்டில்
கரு வானில் வெள்ளை அரிவாளாய்
காதல் கவிதையாய் பெண்ணின் உதட்டில்
அந்தக் காதல் கவிதையை படித்து
அதற்கு இசையாய் இளைஞனின் உதட்டில்
தண்ணீர் காணாத பாலைவன வானவில்லாய்
பணம் காணாத ஏழையின் உதட்டில்
கண்ணீர் பிரார்த்தனைகளுக்கு பதிலாய்
என்றும் புண்ணியமாய் கடவுளின் உதட்டில்
மனிதில் வரலாம் கலங்கம்
கண்ணில் வரலாம் கண்ணீர்
இதயத்தில் வரலாம் கோபம்
உதட்டிலோ சிரிப்பு மட்டும்...
உலகத்தின் பூமாலையாய்
கல்லறையிலும் கருத்தரிக்கும்
கவிதையாய் கணிவது
சிரிப்பு மட்டுமே!!!
கண் திறக்கும் குழந்தையின் உதட்டில்
நள்ளிரவில் பிறை சூடும் நிலவாய்
பிள்ளை பெரும் அன்னையின் உதட்டில்
பிள்ளை தவளும்போது சிதறும் மொட்டாய்
தோளில் ஏந்தும் தந்தையின் உதட்டில்
கரு வானில் வெள்ளை அரிவாளாய்
காதல் கவிதையாய் பெண்ணின் உதட்டில்
அந்தக் காதல் கவிதையை படித்து
அதற்கு இசையாய் இளைஞனின் உதட்டில்
தண்ணீர் காணாத பாலைவன வானவில்லாய்
பணம் காணாத ஏழையின் உதட்டில்
கண்ணீர் பிரார்த்தனைகளுக்கு பதிலாய்
என்றும் புண்ணியமாய் கடவுளின் உதட்டில்
மனிதில் வரலாம் கலங்கம்
கண்ணில் வரலாம் கண்ணீர்
இதயத்தில் வரலாம் கோபம்
உதட்டிலோ சிரிப்பு மட்டும்...
உலகத்தின் பூமாலையாய்
கல்லறையிலும் கருத்தரிக்கும்
கவிதையாய் கணிவது
சிரிப்பு மட்டுமே!!!
No comments:
Post a Comment