CONCRETE வீட்டில் DISCRETE குடும்பம்..
உணவில் எத்தனை உள்ளது ருசி
உடம்பில் எது உள்ளது பசி..
நோய் இல்லா விருந்துகள் இங்கில்லை..
எதையும் வாங்க உள்ளது பணம்
நிம்மதி வாங்க முடியா மனம்..
அறிவுத்தகுதி பெற்ற பட்டதாரிகள் பல
பகுத்தறிவின் இலக்கணம் அறிந்தோர் சில..
பேருக்கு புகழ் சொன்ன காலம் போய்
புகழுக்கு பேர் சொல்லும் காலம் வந்தது..
செய்யும் சதிகளோ
மனிதனின் மதியில்
பலியோ விதியின்
பெயரில்...
No comments:
Post a Comment