Thursday, May 10, 2012

பெண்மை ஒரு மாயம் ஆண் கண்ணில் வரும் காயம்



பெண்மை ஒரு மாயம்
ஆண் கண்ணில் வரும் காயம்
உண்மை இல்லாக் காதல்
இந்தப் பெண்மை வெல்லும் மோதல்..


நண்பன் தந்த பாசம்
அன்னை பொழியும் அன்பு
தந்தாய் உன் பார்வையில்
கொன்றாய் என் வாழ்வை..

இந்த பெண்மை பூசிய கண்மை
அந்த வானவில் கலங்கும் உண்மை
கண்ணீர் மழையில் நனைந்து
இந்த கண்கள் படும் காயம்


மழையில் நனையும்
மழலையாய் மகிழ்ந்த என் உள்ளம்
அது காதல் பாயும் வெள்ளம்

கவிதைகள் வேண்டுமோ
என் காதல் சொல்ல
என் கண்கள் போதாதோ???
அது காதல் பாடாதோ??

No comments: