Thursday, May 10, 2012

கடல் நீரோ??? கண்ணீரோ???

தவறுகள்...
தோற்றம் - பணத்தின் கருவறை
மறைவு - மனிதனின் கல்லறை..

பணமோ உணவாக
பாசமோ முதலாக
பிணமோ முதலாளியாக
உயிரோ லாபமாக
இயங்கும் வாழ்க்கைச்சாலைகள்
எத்தனை????

வாழும் வரை
இன்பம்
தாழ்ந்தவரின்
துன்பம்

உழைப்பில் உயர்வில்லை
உண்மைக்கு உயிர் இல்லை
உள்ளத்தில் ஊக்கம் இல்லை
உடலில் மட்டும் உயிர் உள்ளதோ??

அலட்சிய அரசியல்
அவதூறான அதிகாரம்
அன்பில்லா அரவணைப்பு
அறிவியலின் அச்சாணியோ???

வெள்ளை வேட்டியில் மட்டும் கரை அல்ல
அவை அமரும் நாற்காலியிலும்...

வியக்கிறேன்
அண்டத்தை அரவணைப்பது
கடல் நீரோ???
கண்ணீரோ???

No comments: