Thursday, May 10, 2012

பொறாமை கொண்டது

மின்னலும் பொறாமை கொண்டது
அவளைப் போல என் கண்களை
பறிக்க முடியாததால்...

மழையும் பொறாமை கொண்டது
அவளைப் போல என்னை
நடுக்க முடியாததால்...

காற்றும் பொறாமை கொண்டது
அவளைப் போல என்னை
தீண்ட முடியாததால்...

உயிரும் பொறாமை கொண்டது
தன்னை விட மேலான
அவளை பார்த்து....

No comments: