Thursday, May 10, 2012

கருவறையின் கல்லறையோ?????

ஒரு நிமிடத்தில் ஓர் ஓரப்பார்வையில்
எந்நிமிடமும் அன்பு பார்வை பார்த்த
அன்னையின் அழகு கண்களை
மறக்கிறாய்....

அவன்/அவள் கூறும் ஓர் இரு
தந்திர வார்த்தையில்
மந்திரமான தந்தை சொல்
மறக்கிறாய்....

உன் பேரை சொல்ல ஆசை
என்றதும் உனக்கு பெயர் சூட்டி
கொண்டாடிய பெற்றோர்களை
மறக்கிறாய்....

உன் அழுகைக்கு தோல் கொடுத்ததற்கு
உணாய் அழாமல் தாலாட்டி
தூங்க செய்த தோள்களை
மறக்கிறாய்....

கற்பனை கவிதைகளின்
மேல் கொண்ட ஆர்வத்தில்
கருவில் சுமந்த கடவுளை
மறக்கிறாய்...

காதலின் அர்த்தம் புரியாத
உனக்கு காதல் கவிதை
புரிந்ததோ??

கண் திறந்த நாள் முதல்
காட்டும் காதலை காணாது
கண் இமைக்கும் நேரத்தில்
காதல் என்றாய்...

இதுவே காதல் கவிதையின்
கருவூலமோ???
அன்றி
கருவறையின் கல்லறையோ?????

No comments: