Friday, June 1, 2012

உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது



உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்




"SIR எதாச்சு ஒரு பெயர குறிக்குற WORDSகு பேர் NOUN " என்று தமிழில் தெளிவாக பதில் சொன்னாள் யுவஸ்ரீ..
"WHAT ???? பேர குறிக்குற சொல்லா??" என்று ஆங்கிலேயர் தமிழில் கத்தினார்...
"DONT YOU KNOW TO SPEAK IN ENGLISH??? WHERE DO YOU THINK YOU ARE??? " என்று  கத்தினார்..
"மாப்ள சொன்னேன்ல உன் ஆள் செத்தா டா.. " என்று முணுமுணுத்தான் விவேக்.
"சும்மா இரு டா அவ கரெக்டா தான் சொன்ன ....அந்த ஆளு தான் ENGLISH ல சொல்லலனு திட்ராறு..." என்று சொன்னான் விஜய்.
"SIR நான் தமிழ் MEDIUM.. எனக்கு ENGLISH பேச வராது...சீக்கிரமா கத்துகுறேன் SIR" என்று ஒரு நம்பிக்கையுடன் தெளிவான பார்வையுடன் பார்த்தாள் யுவஸ்ரீ..

"என்னது போக போக கத்துகுரியா??? என்ன LKGயா படிக்குற??? போக போக படிக்குறதுக்கு...ENGINEERING ...YOU CANT STUDY ENGINEERING WITHOUT KNOWING ENGLISH...HMMM...TAMIL MEDIUM படிச்சுட்டு இங்க வந்து எங்க உயிரை வாங்குறது..." என்று கத்தினார்...

சும்மா சத்தமா பேசுனாலே அழுதுருவாங்க இந்த பொண்ணுங்க...
ஏங்கி ஏங்கி அழ தொடங்கிவிட்டாள் யுவஸ்ரீ..

"இந்த பொண்ணுங்களே இப்புடித்தான் டா ...சும்மா அழுற மாதிரி SCENE போட்டு தப்பிசுடுவாங்க" என்றான் விவேக்
"டேய் JAILORகிட்ட அழுதுலாம் தப்பிக்க முடியாது" என்றான் முன்னால் அமர்ந்திருந்த வினோத்.

"HEY WHAT ARE YOU THINKING ...YOU DONT KNOW ENGLISH ..IF I TELL THAT YOU WILL BE CRYING??? SHUT UP YOU IDIOT...STOP CRYING AND SIT DOWN...ITS ALL YOUR FATE....I NEED GOOD MARKS IN EXAM THATS IT..." என்று கோவமாக கத்தினார் JAILOR

அழுதுகொண்டே அமர்ந்தாள் யுவஸ்ரீ....

அவள் அழுகை நனைத்தது அவளது கை குட்டை மட்டும் அல்ல ...விஜயின் இதயத்தையும் தான்...

அவள் அழுததை பார்க்க முடியவில்லை விஜயால்...
"டேய் இவரு பேசுறது சரி இல்ல டா...,இப்புடிலா பேசகூடாது டா.. " என்றான் விஜய்..
"உன் ஆள சொன்ன உனக்கு கோவம் வரத்தான் செய்யும்.. ஆனா உன்னால என்ன டா பண்ண முடியும்...சும்மா பேசாம இரு...அப்புறம் உண்ட கேட்டு உன்னையும் அழ வைக்க போறாரு.." என்றான் விவேக்

"SHUT UP!! GUYS IN THE LAST BENCH...WHAT ARE YOU SPEAKING???GET UP YOU TWO.." என்று கூறி தன் கையில் இருந்த CHALKPIECEஅ தூக்கி எறிந்தார்...

திடுக்கிட்ட இருவரும் மெதுவாக எழுந்தனர்...

"செத்தோம் டா!!" என்று முணுமுணுத்தான் விவேக்...
"WHAT ARE YOU DOING??" என்று கேட்டு அருகில் வந்தார் JAILOR
"SIR...அது ஒன்னும் இல்ல SIR...அவ கரெக்டா சொன்னான்னு சொன்னான் SIR"  என்று பதட்டத்தில் ஓலரிவிட்டான்..

"உனக்கு அவ்ளோ தெரியுமா??? கரெக்டா சொல்றது முக்கியம் இல்ல ENGLISHல சொல்லணும்....அதான் முக்கியம் ENGINEERING படிக்க.."
என்றார் JAILOR

"SIR...நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னு சொல்லட்டா?"
என்றான் விஜய்...

சடாரென்று வகுப்பில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர்...


அடுத்த பாகம் படிக்க
உயிர் - பாகம் - 8 – இதழின் ஒரு ஓரம்

3 comments:

Unknown said...

i expected this twist... good going bro... keep it up :)

Unknown said...

நன்றி அண்ணா!!!

Uma Anandane said...

Very Nice Story :)