Thursday, June 28, 2012

உயிர் - பாகம் - 9 - பீட்டர் பொண்ணுங்க



உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
உயிர் - பாகம் - 8 - இதழின் ஒரு ஓரம்



"EXCUSE ME... " என்றபடி சாதனாவும் யுவஸ்ரியும் விஜயின் பின் வந்து நின்றனர்.

"HI...I AM SAADHANA...." என்று கை நீட்டினாள் சாதனா.
"ஹாய்....நான் தாங்க விவேக்..." என்று அசடு வழிய கை நீட்டினான் விவேக்
"அட உருள உன்ன தெரியாம இருக்குமா???..." என்று கூறி சிரித்தாள் சாதனா .

"என் பேரு யுவஸ்ரீ.." என்றாள் யுவஸ்ரீ..
"என் பேரு விஜய்.." என்றான் விஜய்

"சரி சரி.,..நம்மலா இனிமேல் ஒரே GANG...உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் நான் செய்வேன்....எந்த டவுட்னாலும் ASK ME...I"LL HELP YOU :) " என்றாள் சாதனா..

"டேய் மச்சான் பிச்சகாரிய நம்பலாம்...ஆனா பீட்டர் விடற பொண்ண மட்டும் நம்பக்கூடாது டா" என்று முணுமுணுத்தான் உருளை (விவேக்)

"நீ மொதல்ல இந்த உருளையோட friendshipa கட் பண்ணு ....THEN ONLY IT WILL BE GOOD" என்றாள் சாதனா

"சரி சரி ரெண்டு பேரும் சண்டைய நிறுத்துங்க...எனக்கு பசிக்குது...சாப்பிட வாங்க...." என்று சொல்லி CANTEEN நோக்கி நடக்கதொடங்கினான் விஜய்..

மூஞ்சை சுளித்துக்கொண்டு சாதனாவும் விவேக்கும்.....மெல்லிய சிரிப்புடன் விஜயும் யுவஸ்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நடந்தனர்..
.
நால்வரும் சாப்பாடு வாங்கிக்கொண்டு அமர்ந்தனர்....
"இங்க பாருங்க ...நம்ம அந்த JAILORகு நாம யாருன்னு காட்டனும்....SO.."
என்று சாதனா இழுக்க....

"அவரு முன்னாடி போய் நின்னு நாம யாருன்னு சொன்ன நாம யாருன்னு தெரிய போகுது...இதுக்கு என்னத்த பெருசா PLAN பண்ணிட்டு இருக்க???"
என்றான் வாயில் அப்பளத்தை மொக்கியவாரு கூறினான்

"மூட்ரா வாய...COMING INTERNALSல ரெண்டு பெரும் CLASS FIRST MARK வாங்கணும் எந்த HELP வேணாலும் தயங்காம கேளுங்க..." என்றாள் சாதனா

"ரொம்ப THANKS" என்று விஜயும் யுவஸ்ரியும் ஒரு குரலில் ஒன்றாய் கூறினார்...

"பாருங்கடா UNITYA" என்று சாதனா சிரித்தாள்...

அடுத்த பாகம் படிக்க
உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்து

1 comment:

venkat said...

when will next part be released ?