Wednesday, July 4, 2012

உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்தும்


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
உயிர் - பாகம் - 8 - இதழின் ஒரு ஓரம்
உயிர் - பாகம் - 9 - பீட்டர் பொண்ணுங்க



நால்வரும் வகுப்பறை நோக்கி நடந்துகொன்டிருந்தனர்....
" பேசுகிறேன் பேசுகிறேன் " என்று ஒலித்தது அந்த ரிங்டோன் மீண்டும்...

"நான் பேசிட்டு வர்றேன்...நீங்க போங்க " என்றாள் சற்று தடுமாற்றத்துடன் யுவஸ்ரீ..

"சரி " என்று விஜய் விவேக் சாதனா நடந்தனர்...

ஏன் யுவஸ்ரீ தடுமாறினாள் ...ஏதேனும் பிரச்சன்னையாக இருக்கோமோ என்று எண்ணிக்கொண்டே நடந்தான்...

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....

மணி அடித்த அடுத்த நொடி வகுப்பறைக்குள் நுழைந்தாள் யுவஸ்ரீ....

வழக்கம் போல பாடங்களை தாலாட்டாக பாடி அனைவரையும் உறங்க வைத்துக் கொண்டிருந்தனர் அணைத்து ஆசிரியர்களும்....

படி படியாக பொறியியல் கல்லூரித் தொழிற்ச்சாலைகளில் இயங்கும் இயந்திரமாய் மாறி விட்டனர் அனைவரும்...
ASSIGNMENT, LAB RECORD WORK , OBSERVATION SIGNATURE,....என அனைத்தும் இவர்களது உணவும் சுவாசமும் ஆகிவிட்டது....

இப்படியே நான்கு  மாதம் கழிந்தது..
நால்வரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்...
சாதனா அணைத்து உதவிகளையும் செய்து வந்தாள்...

சில சமயம் அனைவரும் சாதனாவின் வீட்டிற்கு செல்வர்...
சாதனாவின் அப்பா மிக்க நல்லவர்...
நால்வருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தார்
அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை கூறுவார்...

நால்வரும் தங்கள் வீட்டை மறந்து கல்லூரித்தாயின் மடியில் ஆனந்தமாய் விளையாட ஆரம்பித்தனர்..

நடுவில் ஒரு முறை விடுமுறையில் தன் வீட்டிற்கு சென்றான் விஜய்..
அவன் தந்தை தாய் அன்பும் அவன் ஊர் வாசமும் அவனை சொர்கத்திற்கு அழைத்து செல்வது போல உணர்ந்தான்...
ஊர் நண்பர்களுடன் நன்றாக சுத்திவிட்டு மீண்டும் கல்லூரி வர மனம் இன்றி வந்தடைந்தான்...

மூன்று INTERNAL EXAM .........

சாதனா அனைத்து பாடங்களையும் தமிழில் அவர்களுக்கு விளக்கினாள்...
ஆங்கிலத்தின் இலக்கணத்தையும் அவ்வப்போது அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாள்..

ஒரு வழியாக அனைத்து INTERNAL EXAMS நல்ல படியாக எழுதி முடித்து விட்டனர்...
சாதனா தான் முதல் மதிப்பெண் வாங்குவாள்..
மீதி மூவரும் பாஸ் பன்னி விடுவர்....
யுவஸ்ரீ  அனைத்தையும் எளிதில் புரிந்துகொள்வாள்..
ஆனால் அவளுக்கு ஆங்கிலத்தில் கையெழுத்து நன்றாக இராது....
அதனால் அவள் சற்று குறைவாகவே மதிப்பெண் வாங்கினாள்....

கையெழுத்தும் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை இன்றைய கல்வியில்......

விஜய் விவேக் சாதனா அனைவரும் நன்றாக சிரித்து ஒருவரை இருவர் கலாய்த்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் மெல்லிய சிரிப்பு மட்டுமே செய்வாள் யுவஸ்ரீ...

அனைவருடனும் ஒட்டியும் ஒட்டாதது போலவே இருந்தாள்.....

"யுவஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணு டா...ஆனா ஏன் இவ்ளோ அமைதியாவே இருக்கானு தெரில டா" என்றான் விஜய் விவேக்கிடம்....

"டேய் அவ நல்ல பொண்ணு நல்ல பொண்ணு னு ஏன்டா எதோ கொசு மருந்து விக்குறவன் மாதிரி கூவிகிட்டே இருக்க?????.......
டேய் அவல நீ LUV பன்றிய டா??? "
என்றான் விவேக்.....

அடுத்த பாகம் படிக்க

"உயிர் - பாகம் - 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

2 comments:

venkat said...

next episode kaadhala :)

Unknown said...

kaathirukkavum :P kaathalil miga vendiya ondru :P