உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்தும்
உயிர் - பாகம் 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உயிர் - 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....
உயிர் - பாகம் 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உயிர் - 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....
"எப்பா தம்பிகளா உசிலம்பட்டி வரியா போகுது....எந்திரிங்க.." என்றார் அந்த பேருந்து நடத்துனர்...
இருவரும் எழுந்தனர்....உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி இருவரும் தங்கள் ஊர் பேருந்தில் ஏறினர்...
தன் ஊருக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோசம் அவன் மனதை மூழ்கடிக்க...
"good morn :) oorukku vanten...romba happy " என்று டைப் செய்து யுவஸ்ரீக்கு அனுப்பினான்...
சிறிது நேரம் கழித்து அவன் ஊர் வந்தது ...இன்னும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை...
அவன் அம்மா ஆசையாக அவனை கட்டி அனைத்து அரவனைதாள்.... :)
இதனை நாட்கள் கழித்து அன்னையை பார்த்த ஆர்வத்தை தாண்டி....
ஏனோ அவன் மனம் SMS டோனை எதிர் பார்த்தவாறே இருந்தது...
"என்னடா எப்புடி இருக்க ?? " என்றார் அவன் தந்தை..
"நல்லா இருக்கேன் பா ....நீங்க எப்புடி இருக்கீங்க?? வயலுக்கு கெளம்புறீங்களா?" என்றான் விஜய்..
"ஆமா பா அறுவடை காலம் வர போகுது....உனக்கும் பரீட்சை வரபோகுதுல??....இவ்ளோ நாள் கஷ்டப்பட்டத அப்போ தான் காமிக்கணும்...கவனமா படி பா" என்றார் அவன் அப்பா...
"ஆமா பா ...கண்டிப்பா படிக்குறேன்" என்று கூறியவாறு தன் கைபேசியை பார்த்துக்கொண்டே இருந்தான்....
"டேய் தம்பி குளிச்சுட்டு வா பா ...பூரி கொத்துக்கறி செஞ்சு வெச்சிருக்கேன் ....சீக்கிரம் குளிச்சுட்டு வா சாப்பிடலாம்"
என்றாள் அம்மா...
"சரி மா" என்று கூறி துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்....
குளித்துவிட்டு வந்து தலையை கூட துவட்டாமல் கைபேசியை எடுத்து SMS வந்திருக்கா என்று பார்த்தான்... :)
வரவில்லை....எமாற்றதுடன் சாப்பிட சென்றான்....
சாப்பிடும் போதும் அம்மா கல்லூரி பற்றி கேள்வி மேல கேள்வி கேட்க ஆரம்பித்தாள்...
அனைத்திற்கும் நிதானமாக பதில் அளித்தான்....
சாப்பாட்டின் ருசி தெரியாமல் அன்றே முதல் முறை சாபிட்டான்.....
சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிதுக்கொண்டிருக்கையில் அந்த ஒழி ஒலித்தது
டிங் டிங் ...டிங் டிங்
.....
அடுத்த பாகம் படிக்க
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்
3 comments:
ammavoda sapatulaiyum rusi ariyama sapda vaikurathu kathal... arumaiyaana line brother...kavithuvam mass
thank u so much na :)
ting ting ting... :)
wats next ?
Post a Comment