பிறந்த நாள் அன்று இரவு 12 மணிக்கு அவனது MOBILE ஒலித்தது...
"என் இனிய நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பாடலாய் பாடினாள் யுவஸ்ரீ....
ஒரு நிமிடம் கனவோ என்று எண்ணி ஒன்றும் புரியாது மூச்சடைத்து போனான்.
"HELLO யாருன்னு தெரிலயா???" என்றாள் யுவஸ்ரீ :)
"இல்ல நல்ல தெரியுமே....தோழியின் குரல் எப்படி மறக்க முடியும்??....உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி " என்றான் விஜய்..
"சரி நாளைக்கு பாக்கலாம்...தூக்கம் வருது " என்றாள் யுவஸ்ரீ..
"சரி நல்ல தூங்கு...GOOD NIGHT " என்றான் விஜய்
மீண்டும் சந்தேகம் ...உண்மையிலேயே அவ தானா??? என்று குழம்பி போனான்...
அதை பற்றி யோசிப்பதற்குள் சாதனா,வினோத்,அர்ஜுன் என அணைத்து நண்பர்களும் CALL பன்னி WISH பண்ணாங்க....
அவன் அம்மாவும் அப்பாவும் பேசினார்கள்...
மிகுந்த மகிழ்ச்சியோடு...2 மணிக்கு உறங்க சென்றான்....
அடுத்த நாள் ...தங்கள் கல்லூரி வாழ்வின் முதலாம் SEMESTER முடிவடைந்தது.....
மாலை 6 மணி அளவில் சாதனா வீட்டிற்கு விஜயும் விவேக்கும் வந்தனர்....
"வாங்கடா வாங்க....." என்றாள் சாதனா...
"வா விஜய் ....HAPPY BIRTHDAY!!! " என்று சாதனாவின் தந்தை விஜயை கட்டி அணைத்து வாழ்த்தினார்....
"வாங்க ...மேல WAIT பண்ணுவோம்....யுவஸ்ரீ வரட்டும்..." என்றாள் சாதனா
"SORRY கடைக்கு போயிடு வந்தேன் அதான் LATE ஆகிடுச்சு...." என்றாள் யுவஸ்ரீ
கையில் ஒரு GIFT PACK...]
"CAKE READY !!!! HAPPY BIRTHDAY VIJAY " என்று கையில் ஒரு கேக் எடுத்து வந்தார் சாதனாவின் அம்மா...
அனைவரும் happy birthday to you என பாட விஜய் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்....
அனைவரும் CAKE எடுத்து VIJAY முகத்தில் தடவினர்
"போதும் பா போதும் ..." என்று விஜய் கூற....அதை அனைத்தையும் சாதனா CAMERAவில் வீடியோ எடுத்தாள்...
அதன் பின் சாதனா தான் வாங்கி வந்த பரிசை கொடுத்தாள்....
ஒரு அழகிய கண்ணாடி ஊஞ்சல் அதில் இரு பெண்களும் இரு ஆண்களும் இருந்தனர்....
இவர்கள் தான் நம்ம நாலு பெரும் என்றாள் சாதனா...
"ரொம்ப தேங்க்ஸ் சாதனா...எங்க அம்மா பார்த்த ரொம்ப சந்தோஷ படுவாங்க.." என்றான் விஜய்...
"மாப்ள HAPPY BIRTHDAY டா..." என்றான் விவேக்....
"இந்த விஜய் ....என்னால முடிஞ்சது.." என்று யுவஸ்ரீ தனது பரிசை கொடுத்தாள்...
"wow!! DICTIONARY!!! ரொம்ப நாள் வாங்கனும்னு நெனச்சேன்.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் யுவஸ்ரீ....எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..."
என்றான் விஜய்
"எனது பிடிச்சிருக்கு DICTIONARY???" என்று நக்கலாய் கேட்டான் விவேக்...
அனைவரும் சாதனா வின் அம்மாவின் உணவை வயிறார உண்டனர்....
"நாளைல இருந்து ஒரு மாசம் யாரையும் பார்க்க முடியாது....எல்லாரும் நல்ல படிங்க..... டேய் விஜய் விவேக் கூட சேர்ந்து ஊர சுத்தாம படி டா...எந்த டவுட்னாலும் எனக்கு போன் பண்ணுங்க..."
என்றாள் சாதனா..
கிளம்பும்போது மிகுந்த சோகத்துடன் இருந்தாள் யுவஸ்ரீ..
"சரி டா...BUS டைம் ஆச்சு சீக்கிரம் போலாம்"
என்றான் விவேக்...
"அப்போ நாங்க கெளம்புறோம்..." எம்றான் விஜய்
"பத்திரமா போங்க...நான் நாளைக்கு காலைல கெளம்புறேன்" என்றாள் யுவஸ்ரீ
"சரி" என்று கூறி நால்வரும் பிரிந்தனர்....
"டேய் இந்த BUS தான் டா" என்றான் விவேக்..
இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்...
ஊருக்கு போகிறோம் என்ற சந்தோஷத்தை விட நண்பர்களை பிரிந்த சோகம் தான் அவனது உறக்கத்தின் சிறைச்சாலை....
அடுத்த பாகம் படிக்க
உயிர் - 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
அடுத்த பாகம் படிக்க
உயிர் - 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
No comments:
Post a Comment