Thursday, April 4, 2013

உயிர் - பாகம் 16 - படித்துக்கொண்டும் பயந்துகொண்டும்.....



உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்




மறு நாள் காலை 6 மணிக்கு சிறிதும் தப்பாமல் அலாரம் அடித்தது...
திடுக்கிட்டு விழித்தவிஜய் முதலில் பார்த்தது அவன் கைபேசி....
எந்த மேச்சேஜ்ஜூம் இல்லை.....

அருகில் இருந்த விவேகை எட்டி உதைத்து எழுப்பினான்
காலை கடன்களை முடித்து இருவரும் சாப்பிட சென்றனர்...

அப்போது ஒலித்தது யுவஸ்ரியின் பெயரை அவன் கைபேசி
"hi vivek am sorry a lot ....i  studying with saadhana...athaan reply pannala.,...neeyum nalla padi...exam mudinju pesuvom....rendu perum nalla mark vaanguvom ok? enaku all the best solllu vijay " என்டறது அந்த எழுத்துக்கள்...

விஜய் சாப்பிடாமல்  அந்த எழுத்துக்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது போனை பிடிங்கினான் விவேக்...

வாசித்து விட்டு "பார்ர்ர்ரா !!!! காதல் தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் வேண்டுமா உன் தோழிக்கு ?? "
என்று கத்தினான்

"டேய் சும்மா இரு டா!!! இது காதல் லா இல்ல டா....நாங்க நல்ல friends டா.....வா போய் படிப்போம்..." என்று கூறிக்கொண்டு "sorry la venaam ...nalla padi....thanks ....all the best ....u get good score sure" என்று அனுப்பினான் தன் வாழ்த்துக்களை...

"சரி நன்றி ...Bye :) " என்றது அவளின் நன்றிகள்....

இருவரும் தமிழ் மீடியம் என்பதால் பெரிதும் தடுமாறினார்...அவ்வபொழுது ராகவன் சாரிடம் போய் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.....
தேர்வுக்கு முந்தய நாள்  காலை அவன் யுவஸ்ரீக்கு message அனுப்பினான் ... " gud morining ....studied all?? i fear much " என்று தனக்கு தெரிந்த மொழியில் அனுப்பினான்...

எந்த பதிலும் இல்லை....சற்று மனம் நொந்து போய் அமர்ந்தான்

திடீர் என்று கை பேசி ஒலித்தது....
"amma calling..........." என்ற எழுத்துக்கள் மின்ன....போனை எடுத்தான்/...

"ஹலோ!!!!!!!! நான் அம்மா பேசுறேன் பா....எப்புடி இருக்க கண்ணு????" என்று பாசம் பொங்கியது தாயின் குரல்...
"அம்மா நல்லா இருக்கேன் மா...நீ எப்புடி இருக்க???அப்பா நல்லா இருக்காறா???" என்று கேட்டான்
"நாங்க எல்லா நல்லா இருக்கோம் கண்ணு .....உனக்காக கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் பா...சாப்டியா???" என்று கேட்டாள்
"இல்லா மா !!! இனிமேல் தான்.....நாளைக்கு பரிட்ச இருக்கு.....கொஞ்சம் பயமா இருக்கு!!!" என்றான் ...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணு...நீ நல்லா எழுதுவ பா....பயப்படாத...சாமி கும்பிட்டு போ....ராத்திரி சீக்கிரமா தூங்கிரு பா....விவேக் எல்லாம் நல்லா படிக்குறானா??? ?" என்று கேட்டாள்

"நல்லா படிக்குறான் மா...சரி மா நான் சாப்பிட போறேன் மா " என்று கூறி போனை வச்சுவிட்டான்.....

பின்பு யுவஸ்ரீ மெசேஜ் பண்ணிருந்தாள்...
"gud morning...enakum bayam thaan"  என்றது
அவள் பயத்தை பார்த்ததும் இவனுக்கு தைரியம் வந்தது...
அவளுக்கு ஆறுதல் சொல்ல....
"nee nalla eluthuva....kavala padaaatha....ellam nallla pogum...dnt worry" என்றான்.,...

அடுத்த நாள் பரீட்சை....

இரவு முழுதும் விழித்திருந்தான்......
படித்துக்கொண்டும் பயந்துகொண்டும்.....

பொறியியல் முதல் தேர்வு எவ்வளவு அக்கறையோடு எழுத வேண்டும் என்று மிகவும் கவனாமாக இருந்தனர்...



தொடர்ந்து படிக்க

உயிர் பாகம் - 17 - முதல் பரீட்சை

No comments: