Monday, September 16, 2013

உயிர் பாகம் - 17 - முதல் பரீட்சை

உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்




வழக்கம் போல காலை 6 மணிக்கு எழுந்து வேலைகளை முடித்து கோவிலுக்கு சென்றான் விஜய்.. விவேக் நன்றாக உறங்கி கொண்டிருந்தான் தன் புத்தக தலையணையில்...


"nalla eluthu ..all the best :) " என எதிர்பார்த்தது போல யுவஸ்ரியின் குரல் அவன் தொலைபேசியில் ..பின் அம்மா அழைத்தாள்.

பரீட்சை அறைக்கு சென்றான்...யுவஸ்ரியை அத்தனை நாட்களுக்கு பின்பு பார்த்ததில் அவனுக்கு பரீட்சை பயம் போனது...எதோ புத்துணர்ச்சி பெற்றது போல் தோன்றியது...

"தம்பி பரீட்சை இன்னைக்கு ...கேள்வி இந்த book ல இருந்து கேப்பானுங்க...!! அந்த பொண்ணு மூன்சுள இல்ல....ஒழுங்கா படி " என்றான் விவேக்...

"ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்....." என்ன ஒலி எழுப்பியது மணி...

"மச்சா சங்கு ஊதிட்டானுங்க டா!!!" என்றான் விவேக்...

அனைவரும் பரீட்சை அறைக்கு சென்றனர்...

பரீட்சை தொடங்கியது...தனக்கு பின்னால் இருந்த யுவஸ்ரியை பார்த்துக்கொண்டான் ...கடவுளை பார்ப்பது போல....

வினாத்தாள் வாங்கி எதோ கொஞ்சம் தெரிந்த கேள்விகள் கண்டு எழுத தொடங்கினான்

மூன்று மணி நேரம் மயான அமைதி அந்த கட்டிடத்தில்....

எழுதி முடித்து விட்டு திரும்பி பார்க்கிறான் ...
விவேக் நன்றாக தூங்கிகொண்டிருந்தான்....யுவஸ்ரீ சற்று பதற்றத்துடன் காணப்பட்டாள்...

இவனுக்கு படபடவென்றது....

மணி அடித்ததும் விடைத்தாள் கொடுத்துவிட்டு அழத்தொடங்கினாள் யுவஸ்ரீ....
அவள் கண்ணீரில் கரைந்தது இவனது இதயம்....பதரிபோனான்....

"ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் பா :( ஆனா எல்லாம் மறந்துடுச்சு...மொதல் question  choice தப்பா எடுத்து எழுதிட்டேன் " என்று அழுதாள் யுவஸ்ரீ....

"hey comeon!! அதெல்லாம் மார்க் வந்துடும்...dont worry " என்று சாதனா யுவஸ்ரிக்கு ஆறுதல் கூறினாள்.

விவேக் விஜயிடம் "என்ன மச்ச உன் ஆளுக்கு ஊத்திக்குச்சு போல" என்று சொல்ல..."மூட்ரா வாய "என்று கதிவிட்டான்
விவேக் சற்று பதரிபோனான் ..."மச்சா சாரி டா...வா என்ன நு போய் கேட்போம் டா/...

இருவரும் யுவஸ்ரியை நோக்கி நடந்தனர்...
இருவரையும் கண்டதும் சாதனாவிடம் "நான் போயிட்டு வர்றேன்" என்று கூறி சென்றுவிட்டாள்...

"HEY WAIT YUVASHRIII!!!! ...சாரி பா...அவ மூட் அவுட் ஆய்டா/...அதான்.....dont mistake,....how you guys did the exam??? " என்று சாதனா கேட்க...யுவஸ்ரியை பார்த்துகொண்டே இருந்தான்....

"எதோ எழுதிருக்கு" என்று விவேக் கூற..."சரி i have to go guys...bye all the best for next exam " என்று கூறி சாதனா விடைபெற்றாள்...

"டேய் பரீட்சை நல்ல எழுத்தளனு பொண்ணுங்க அழ தான் செய்வாளுங்க...!! கடைசீல எல்லா நல்லா மார்க் வாங்கிடுவாளுங்க ....பொண்ணுங்கள வாழ்க்கைல கூட நம்பலாம் ஆனா பரீட்சை ல நம்ப கூடாது " என்றான் விவேக்...

இருந்தும் அவள் கண்ணீர் இவன் இதயத்தை கரைத்து கொண்டே தான் இருந்தது.,.....

No comments: