Saturday, October 24, 2015

இந்த வரிகளின் அர்த்தம் காதலோ ? அல்ல இயற்கையின் கவிதையோ ?

இரு கரம் சேர்த்து கையில் ஏந்தும்
அகல் விளக்காய்
உன் கன்னம் ஏந்தும் போது
தோன்றும் புன்னகையும்
இயற்கையின் கவிதையோ ? !!

பறவையின் சிறகு
காற்றில் மிதந்து செல்வதும்
அவள் பேச்சு
காற்றில் மிதந்து செல்வதும்
இயற்கையின் கவிதையோ?

கடல் அலைகள்
கரையில் நுரையாய் தீட்டுவதும்
அவள் கூந்தல்
என் முகத்தில் அலையாய் அடிப்பதும்
இயற்கையின் கவிதையோ ?

புல்லின் மேல் பனித்துளி
நடனமாடுவதும்
அவள் காதுகளில் கம்மல்
நடனமாடுவதும்
இயற்கையின் கவிதையோ ?

வெள்ளி ஒளியாய்
இருள் நீக்கும் நிலவும்
வெள்ளி மலராய்
அவள் சிரிப்பும்
இயற்கையின் கவிதையோ ?

இந்த வரிகளின்
அர்த்தம் காதலோ ?
அல்ல
இயற்கையின் கவிதையோ ?



No comments: