Showing posts with label உயிர் தொடர் கதை. Show all posts
Showing posts with label உயிர் தொடர் கதை. Show all posts

Monday, September 16, 2013

உயிர் பாகம் - 17 - முதல் பரீட்சை

உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்




வழக்கம் போல காலை 6 மணிக்கு எழுந்து வேலைகளை முடித்து கோவிலுக்கு சென்றான் விஜய்.. விவேக் நன்றாக உறங்கி கொண்டிருந்தான் தன் புத்தக தலையணையில்...


"nalla eluthu ..all the best :) " என எதிர்பார்த்தது போல யுவஸ்ரியின் குரல் அவன் தொலைபேசியில் ..பின் அம்மா அழைத்தாள்.

பரீட்சை அறைக்கு சென்றான்...யுவஸ்ரியை அத்தனை நாட்களுக்கு பின்பு பார்த்ததில் அவனுக்கு பரீட்சை பயம் போனது...எதோ புத்துணர்ச்சி பெற்றது போல் தோன்றியது...

"தம்பி பரீட்சை இன்னைக்கு ...கேள்வி இந்த book ல இருந்து கேப்பானுங்க...!! அந்த பொண்ணு மூன்சுள இல்ல....ஒழுங்கா படி " என்றான் விவேக்...

"ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்....." என்ன ஒலி எழுப்பியது மணி...

"மச்சா சங்கு ஊதிட்டானுங்க டா!!!" என்றான் விவேக்...

அனைவரும் பரீட்சை அறைக்கு சென்றனர்...

பரீட்சை தொடங்கியது...தனக்கு பின்னால் இருந்த யுவஸ்ரியை பார்த்துக்கொண்டான் ...கடவுளை பார்ப்பது போல....

வினாத்தாள் வாங்கி எதோ கொஞ்சம் தெரிந்த கேள்விகள் கண்டு எழுத தொடங்கினான்

மூன்று மணி நேரம் மயான அமைதி அந்த கட்டிடத்தில்....

எழுதி முடித்து விட்டு திரும்பி பார்க்கிறான் ...
விவேக் நன்றாக தூங்கிகொண்டிருந்தான்....யுவஸ்ரீ சற்று பதற்றத்துடன் காணப்பட்டாள்...

இவனுக்கு படபடவென்றது....

மணி அடித்ததும் விடைத்தாள் கொடுத்துவிட்டு அழத்தொடங்கினாள் யுவஸ்ரீ....
அவள் கண்ணீரில் கரைந்தது இவனது இதயம்....பதரிபோனான்....

"ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் பா :( ஆனா எல்லாம் மறந்துடுச்சு...மொதல் question  choice தப்பா எடுத்து எழுதிட்டேன் " என்று அழுதாள் யுவஸ்ரீ....

"hey comeon!! அதெல்லாம் மார்க் வந்துடும்...dont worry " என்று சாதனா யுவஸ்ரிக்கு ஆறுதல் கூறினாள்.

விவேக் விஜயிடம் "என்ன மச்ச உன் ஆளுக்கு ஊத்திக்குச்சு போல" என்று சொல்ல..."மூட்ரா வாய "என்று கதிவிட்டான்
விவேக் சற்று பதரிபோனான் ..."மச்சா சாரி டா...வா என்ன நு போய் கேட்போம் டா/...

இருவரும் யுவஸ்ரியை நோக்கி நடந்தனர்...
இருவரையும் கண்டதும் சாதனாவிடம் "நான் போயிட்டு வர்றேன்" என்று கூறி சென்றுவிட்டாள்...

"HEY WAIT YUVASHRIII!!!! ...சாரி பா...அவ மூட் அவுட் ஆய்டா/...அதான்.....dont mistake,....how you guys did the exam??? " என்று சாதனா கேட்க...யுவஸ்ரியை பார்த்துகொண்டே இருந்தான்....

"எதோ எழுதிருக்கு" என்று விவேக் கூற..."சரி i have to go guys...bye all the best for next exam " என்று கூறி சாதனா விடைபெற்றாள்...

"டேய் பரீட்சை நல்ல எழுத்தளனு பொண்ணுங்க அழ தான் செய்வாளுங்க...!! கடைசீல எல்லா நல்லா மார்க் வாங்கிடுவாளுங்க ....பொண்ணுங்கள வாழ்க்கைல கூட நம்பலாம் ஆனா பரீட்சை ல நம்ப கூடாது " என்றான் விவேக்...

இருந்தும் அவள் கண்ணீர் இவன் இதயத்தை கரைத்து கொண்டே தான் இருந்தது.,.....

Thursday, April 4, 2013

உயிர் - பாகம் 16 - படித்துக்கொண்டும் பயந்துகொண்டும்.....



உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்




மறு நாள் காலை 6 மணிக்கு சிறிதும் தப்பாமல் அலாரம் அடித்தது...
திடுக்கிட்டு விழித்தவிஜய் முதலில் பார்த்தது அவன் கைபேசி....
எந்த மேச்சேஜ்ஜூம் இல்லை.....

அருகில் இருந்த விவேகை எட்டி உதைத்து எழுப்பினான்
காலை கடன்களை முடித்து இருவரும் சாப்பிட சென்றனர்...

அப்போது ஒலித்தது யுவஸ்ரியின் பெயரை அவன் கைபேசி
"hi vivek am sorry a lot ....i  studying with saadhana...athaan reply pannala.,...neeyum nalla padi...exam mudinju pesuvom....rendu perum nalla mark vaanguvom ok? enaku all the best solllu vijay " என்டறது அந்த எழுத்துக்கள்...

விஜய் சாப்பிடாமல்  அந்த எழுத்துக்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது போனை பிடிங்கினான் விவேக்...

வாசித்து விட்டு "பார்ர்ர்ரா !!!! காதல் தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் வேண்டுமா உன் தோழிக்கு ?? "
என்று கத்தினான்

"டேய் சும்மா இரு டா!!! இது காதல் லா இல்ல டா....நாங்க நல்ல friends டா.....வா போய் படிப்போம்..." என்று கூறிக்கொண்டு "sorry la venaam ...nalla padi....thanks ....all the best ....u get good score sure" என்று அனுப்பினான் தன் வாழ்த்துக்களை...

"சரி நன்றி ...Bye :) " என்றது அவளின் நன்றிகள்....

இருவரும் தமிழ் மீடியம் என்பதால் பெரிதும் தடுமாறினார்...அவ்வபொழுது ராகவன் சாரிடம் போய் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.....
தேர்வுக்கு முந்தய நாள்  காலை அவன் யுவஸ்ரீக்கு message அனுப்பினான் ... " gud morining ....studied all?? i fear much " என்று தனக்கு தெரிந்த மொழியில் அனுப்பினான்...

எந்த பதிலும் இல்லை....சற்று மனம் நொந்து போய் அமர்ந்தான்

திடீர் என்று கை பேசி ஒலித்தது....
"amma calling..........." என்ற எழுத்துக்கள் மின்ன....போனை எடுத்தான்/...

"ஹலோ!!!!!!!! நான் அம்மா பேசுறேன் பா....எப்புடி இருக்க கண்ணு????" என்று பாசம் பொங்கியது தாயின் குரல்...
"அம்மா நல்லா இருக்கேன் மா...நீ எப்புடி இருக்க???அப்பா நல்லா இருக்காறா???" என்று கேட்டான்
"நாங்க எல்லா நல்லா இருக்கோம் கண்ணு .....உனக்காக கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் பா...சாப்டியா???" என்று கேட்டாள்
"இல்லா மா !!! இனிமேல் தான்.....நாளைக்கு பரிட்ச இருக்கு.....கொஞ்சம் பயமா இருக்கு!!!" என்றான் ...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணு...நீ நல்லா எழுதுவ பா....பயப்படாத...சாமி கும்பிட்டு போ....ராத்திரி சீக்கிரமா தூங்கிரு பா....விவேக் எல்லாம் நல்லா படிக்குறானா??? ?" என்று கேட்டாள்

"நல்லா படிக்குறான் மா...சரி மா நான் சாப்பிட போறேன் மா " என்று கூறி போனை வச்சுவிட்டான்.....

பின்பு யுவஸ்ரீ மெசேஜ் பண்ணிருந்தாள்...
"gud morning...enakum bayam thaan"  என்றது
அவள் பயத்தை பார்த்ததும் இவனுக்கு தைரியம் வந்தது...
அவளுக்கு ஆறுதல் சொல்ல....
"nee nalla eluthuva....kavala padaaatha....ellam nallla pogum...dnt worry" என்றான்.,...

அடுத்த நாள் பரீட்சை....

இரவு முழுதும் விழித்திருந்தான்......
படித்துக்கொண்டும் பயந்துகொண்டும்.....

பொறியியல் முதல் தேர்வு எவ்வளவு அக்கறையோடு எழுத வேண்டும் என்று மிகவும் கவனாமாக இருந்தனர்...



தொடர்ந்து படிக்க

உயிர் பாகம் - 17 - முதல் பரீட்சை

Saturday, February 2, 2013

உயிர்- பாகம் - 15 - கைபேசியில் கைதாகி இருந்தது...


உயிர் -பாகம் 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்






நாட்களும் நகர்ந்தது....குறுந்தகவலும் தனிமைச் சிரிப்பும் தான் அவர்களது விடுமுறை நாட்களின் தோழன்...

அவ்வப்போது விவேக் வந்து விஜயிடம் தேர்வு பயத்தை தெளித்து விடுவான்...

நாட்கள் கடந்தது அறியாதவர்களாய் கைபேசியின் சிறையில் அடைபட்ட இரண்டு குருவிகளுக்கும் சற்று பயம் கொள்ளத் தொடங்கினார்கள்..

"நான் hostel போக போறேன்..இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு...ரொம்ப பயமா இருக்கு...அங்க போனா சாதனா கூட சேர்ந்து படிப்பேன்" என்று ஒரு புறா அவன் கைபேசியில் சிறகடித்து...

"டேய் நம்மளும் hostel கெளம்புவோம் டா.." என்று விவேக்கிடம் சொன்னான்..
"சரி" என்று இருவரும்ன் மீண்டும் hostel சென்றனர்..

இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது முதல் பொறியியல் தேர்வு...
hostel வெறிச்சோடி இருந்தது....

கல்லூரி நாட்களில் காலையில் வாளிகள் போட்ட தாளம்...
இன்று குழாயில் சிந்தும் தண்ணீரின் ஓசை மட்டும் தான்...

அனைவரும் தேர்வுக்கு முந்தய நாள் தான் வருவார்கள்....
அனால் இவர்களோ சிறகு முளைத்தும் பறக்க கற்றுக் கொள்ளாத தமிழ் மீடியம் பசங்க என்ற எண்ணம் அவ்விருவருக்கும்,....

HOSTEL வந்து சேர்ந்ததும் "வந்து விட்டேன்" என்று யுவஸ்ரியின் கைபேசியில் calling bell அடித்தான்...

எந்த கதவும் திறக்க வில்லை...

"மச்சான் குளிசுட்டேன் ...வா டா சாப்பிட போலாம்....மெஸ் காலியா இருக்கும் டா....நல்லா சாபிடலாம்..." என்று விவேக் வந்து விஜயை எழுப்பினான்...

"எனக்கு பசிக்கல டா...நீ போ.." என்றான் விஜய்

"பசிக்கலையா??? இல்ல மெசேஜ் வரலையா???" என்று ஓட்ட விவேக்கை அடித்தபடி எழுந்தான் விஜய் ...

சாப்பிடும் போதும் கைபேசியை தான் அவன் கை பிசைந்தது,.....
சாப்பிட்டு விட்டு இருவரும் அறைக்கு சென்றனர்...

"ஹப்பா!!!!! அந்த fan போடு டா......நல்லா தூங்கனும் டா...."
என்று விவேக் கட்டிலில் விழுந்தான்...

"டேய் படிக்குறதுக்கு தான டா ..இவ்ளோ சீக்கிரம் கெளம்பி வந்தோம்...இங்க வந்து இப்படி படுத்துட்டா என்ன டா அர்த்தம்??? " என்று விஜய் சொல்ல...

"டேய் டேய் அடங்கு டா... நீ எப்புடியும் மெசேஜ் வராம படிக்க மாட்ட...அது வரைக்கும் உன் ஓட்ட  ரேடியோ வ நான் கேக்க மாட்டேன் பா....மெசேஜ் வந்ததும் எழுப்பு...."
என்று கூறியபடி கண்ணுக்கு திரை இட்டான் விவேக்...

விஜய் படிக்க வேண்டும் என்று புத்தகம் எடுத்து அமர்ந்தான்....
ஆனால் அவன் மனமோ கைபேசியில் கைதாகி இருந்தது...
சரியாக செயல் பட்டது ஒன்று அந்த அறையின் கடிகாரம் தான்....

இரவு 7 மணி.... இன்னும் எந்த பதிலும் இல்லை....சற்று வெறுப்பும் சோகமும் படித்து அவன் முகத்தில் எழுதிக்கொண்டான்....


தொடர்ந்து படிக்க...

உயிர் - பாகம் 16 - படித்துக்கொண்டும் பயந்துகொண்டும்.....

Saturday, October 27, 2012

உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்






அந்த ஒலியை கேட்டதும் அவன் இதயம் துடிப்பதை கேட்டான்...அவளின் MESSAGE ஆக இருக்க வேண்டும் என்று கும்பிட்டு போனைப் பார்த்தான்

"விவேக்" என்ற பெயரை கண்டதும் FUSE போன BULB போல வாடினான்..
"enna da olunga veedu poi sernthiya?" என்று இருந்த message கண்டு சற்று கோபப்பட்டான்...

டிங் டிங் ...மீண்டும் அந்த ஒலி....

switch போட்டதும் எரியும்  0 வாட்ஸ் bulb போல பிரகாசித்தது விஜயின் முகம் 
யுவஸ்ரீயின் பெயர் கண்டு :) :) :)  

"GOOD MORNING pa...am also happy...saaptiya?" என்று இருந்தது அந்த வரிகள்...

சிறிது கொண்டே "naan saapiten...nee?" என்று அனுப்பினான்...

"innum illa ...inimel thaan " என்றாள்...

"seekiram saapidu ...ivlo late aaguthu" என்று அக்கறையோடு அனுப்பினான்...

"டேய் விஜய் ...இந்தா டா அப்பா உனக்காக பழம் வாங்கி வந்திருக்காங்க ...வந்து சாப்பிடு டா " என்று அம்மா கூப்பிட்டாள்..

"வர்றேன் மா ...." என்று கூறிவிட்டு..கீழே சென்றான்..

"வா பா college நல்லா இருக்கா?? சாப்பாடு எல்லாம் சரியா சாபுடுரியா??" என்று அக்கறையோடு கேட்டார் தந்தை

"எல்லாம் நல்ல இருக்கு பா..." என்று கூறினான் நிறைந்த புன்னகையுடன்...

"அப்புறம் நல்லா படி பா...இல்லான எங்கள மாதிரி கஷ்ட பட வெச்சுடுவாய்ங்க....நம்ம நாலு பேருக்கு வேல குடுக்கணும்....நல்லா படி பா" என்று தந்தை தன் மந்திர வார்த்தைகளை போதிக்க
கையில் இருந்த போனை பார்த்து கொண்டிருந்தான்...
அது மீண்டும் யுவஸ்ரீ பெயரை உச்சரிக்க..


"எம்மா சாப்பாடு எடுத்து வெச்சு கால் மணி நேரம் ஆச்சு...என்ன மா பண்ற?? சீக்கிரம் சாப்பிட வா " என்று தன் தந்தையின் குரல் தான் யுவஸ்ரியின் விழிகளை போனில் இருந்து எடுத்தது...

"என்ன புள்ள college லா எப்புடி போகுது??" என்று தந்தை கேட்க..
புன்னகையுடன் "நல்ல போது அப்பா.." என்றாள் யுவஸ்ரீ...

இருவரும் அவரவர் சொந்த ஊரில் இருந்தாலும் ...
இருவரின் இதயமும் இணைந்தது குறுந்தகவலில் தான் :)


தொடர்ந்து படிக்க....

உயிர்- பாகம் - 15 - கைபேசியில் கைதாகி இருந்தது...

Wednesday, August 1, 2012

உயிர் - 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்







காலை  6 மணி அளவில் அவன் ஊர் மண்வாசம் தான் அவனை உசுப்பியது உறக்கத்தில் இருந்து...

"எப்பா தம்பிகளா உசிலம்பட்டி வரியா போகுது....எந்திரிங்க.." என்றார் அந்த பேருந்து நடத்துனர்...

இருவரும் எழுந்தனர்....உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி இருவரும் தங்கள் ஊர் பேருந்தில் ஏறினர்...

தன் ஊருக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோசம் அவன் மனதை மூழ்கடிக்க...

"good morn :) oorukku vanten...romba happy " என்று டைப் செய்து யுவஸ்ரீக்கு அனுப்பினான்...

சிறிது நேரம் கழித்து அவன் ஊர் வந்தது ...இன்னும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை...

அவன் அம்மா ஆசையாக அவனை கட்டி அனைத்து அரவனைதாள்.... :)
இதனை நாட்கள் கழித்து அன்னையை பார்த்த ஆர்வத்தை தாண்டி....
ஏனோ அவன் மனம் SMS டோனை எதிர் பார்த்தவாறே இருந்தது...

"என்னடா எப்புடி இருக்க ?? " என்றார் அவன் தந்தை..

"நல்லா இருக்கேன் பா ....நீங்க எப்புடி இருக்கீங்க?? வயலுக்கு கெளம்புறீங்களா?" என்றான் விஜய்..

"ஆமா பா அறுவடை காலம் வர போகுது....உனக்கும் பரீட்சை வரபோகுதுல??....இவ்ளோ நாள் கஷ்டப்பட்டத அப்போ தான் காமிக்கணும்...கவனமா படி பா" என்றார் அவன் அப்பா...

"ஆமா பா ...கண்டிப்பா படிக்குறேன்" என்று கூறியவாறு தன் கைபேசியை பார்த்துக்கொண்டே இருந்தான்....

"டேய்  தம்பி குளிச்சுட்டு வா பா ...பூரி கொத்துக்கறி செஞ்சு வெச்சிருக்கேன் ....சீக்கிரம் குளிச்சுட்டு வா சாப்பிடலாம்"
என்றாள் அம்மா...

"சரி மா" என்று கூறி துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்....

குளித்துவிட்டு வந்து தலையை கூட துவட்டாமல் கைபேசியை எடுத்து SMS வந்திருக்கா என்று பார்த்தான்... :)

வரவில்லை....எமாற்றதுடன் சாப்பிட சென்றான்....

சாப்பிடும் போதும் அம்மா கல்லூரி பற்றி கேள்வி மேல கேள்வி கேட்க ஆரம்பித்தாள்...

அனைத்திற்கும் நிதானமாக பதில் அளித்தான்....

சாப்பாட்டின் ருசி தெரியாமல் அன்றே முதல் முறை சாபிட்டான்.....

சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிதுக்கொண்டிருக்கையில் அந்த ஒழி ஒலித்தது

டிங் டிங் ...டிங் டிங்
.....

அடுத்த பாகம் படிக்க
உயிர் - 14 - இணைந்தது குறுந்தகவலில் தான்

Saturday, July 21, 2012

உயிர் - 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....








பிறந்த நாள் அன்று இரவு 12 மணிக்கு அவனது MOBILE ஒலித்தது...

"என் இனிய நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பாடலாய் பாடினாள் யுவஸ்ரீ....

ஒரு நிமிடம் கனவோ என்று எண்ணி ஒன்றும் புரியாது மூச்சடைத்து போனான்.

"HELLO யாருன்னு தெரிலயா???" என்றாள் யுவஸ்ரீ :)


"இல்ல நல்ல தெரியுமே....தோழியின் குரல் எப்படி மறக்க முடியும்??....உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி " என்றான் விஜய்.. 


"சரி நாளைக்கு பாக்கலாம்...தூக்கம் வருது " என்றாள் யுவஸ்ரீ..


"சரி நல்ல தூங்கு...GOOD NIGHT " என்றான் விஜய்


மீண்டும் சந்தேகம் ...உண்மையிலேயே அவ தானா??? என்று குழம்பி போனான்...
அதை பற்றி யோசிப்பதற்குள் சாதனா,வினோத்,அர்ஜுன் என அணைத்து நண்பர்களும் CALL பன்னி WISH பண்ணாங்க....

அவன் அம்மாவும் அப்பாவும் பேசினார்கள்...

மிகுந்த மகிழ்ச்சியோடு...2 மணிக்கு உறங்க சென்றான்....

அடுத்த நாள் ...தங்கள் கல்லூரி வாழ்வின் முதலாம் SEMESTER முடிவடைந்தது.....

மாலை  6 மணி அளவில் சாதனா வீட்டிற்கு விஜயும் விவேக்கும் வந்தனர்....

"வாங்கடா வாங்க....." என்றாள் சாதனா...

"வா விஜய் ....HAPPY BIRTHDAY!!! " என்று சாதனாவின் தந்தை விஜயை கட்டி அணைத்து வாழ்த்தினார்....

"வாங்க ...மேல WAIT பண்ணுவோம்....யுவஸ்ரீ வரட்டும்..." என்றாள் சாதனா

"SORRY கடைக்கு போயிடு வந்தேன் அதான் LATE ஆகிடுச்சு...." என்றாள் யுவஸ்ரீ

கையில் ஒரு GIFT PACK...]

"CAKE READY !!!! HAPPY BIRTHDAY VIJAY " என்று கையில் ஒரு கேக் எடுத்து வந்தார் சாதனாவின் அம்மா...

அனைவரும் happy birthday to you என பாட விஜய் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்....






அனைவரும் CAKE எடுத்து VIJAY முகத்தில் தடவினர்


"போதும் பா போதும் ..." என்று விஜய் கூற....அதை அனைத்தையும் சாதனா CAMERAவில் வீடியோ எடுத்தாள்...


அதன் பின் சாதனா தான் வாங்கி வந்த பரிசை கொடுத்தாள்....
ஒரு அழகிய கண்ணாடி ஊஞ்சல் அதில் இரு பெண்களும் இரு ஆண்களும் இருந்தனர்....
இவர்கள் தான் நம்ம நாலு பெரும் என்றாள் சாதனா...

"ரொம்ப தேங்க்ஸ் சாதனா...எங்க அம்மா பார்த்த ரொம்ப சந்தோஷ படுவாங்க.." என்றான் விஜய்...

"மாப்ள HAPPY BIRTHDAY டா..." என்றான் விவேக்....

"இந்த விஜய் ....என்னால முடிஞ்சது.." என்று யுவஸ்ரீ தனது பரிசை கொடுத்தாள்...

"wow!! DICTIONARY!!! ரொம்ப நாள் வாங்கனும்னு நெனச்சேன்.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் யுவஸ்ரீ....எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..."
என்றான் விஜய்

"எனது பிடிச்சிருக்கு DICTIONARY???" என்று நக்கலாய் கேட்டான் விவேக்...

அனைவரும் சாதனா வின் அம்மாவின் உணவை வயிறார உண்டனர்....

"நாளைல இருந்து ஒரு மாசம் யாரையும் பார்க்க முடியாது....எல்லாரும் நல்ல படிங்க..... டேய் விஜய் விவேக் கூட சேர்ந்து ஊர சுத்தாம படி டா...எந்த டவுட்னாலும் எனக்கு போன் பண்ணுங்க..."
என்றாள் சாதனா..

கிளம்பும்போது மிகுந்த சோகத்துடன் இருந்தாள் யுவஸ்ரீ..

"சரி டா...BUS டைம் ஆச்சு சீக்கிரம் போலாம்"
 என்றான் விவேக்...

"அப்போ நாங்க கெளம்புறோம்..." எம்றான் விஜய்

"பத்திரமா போங்க...நான் நாளைக்கு காலைல கெளம்புறேன்" என்றாள் யுவஸ்ரீ

"சரி" என்று கூறி நால்வரும் பிரிந்தனர்....

"டேய் இந்த BUS தான் டா" என்றான் விவேக்..
இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்...

ஊருக்கு போகிறோம் என்ற சந்தோஷத்தை விட நண்பர்களை பிரிந்த சோகம் தான் அவனது உறக்கத்தின் சிறைச்சாலை....


அடுத்த பாகம் படிக்க
உயிர் - 13 - ருசி தெரியாமல் சாபிட்டான்

Friday, July 13, 2012

உயிர் - பாகம் 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்








"டேய் அதெல்லாம் எனக்கு தெரியாது.....அவ நல்ல பொண்ணு.....எனக்கு பிடிக்கும்...அவ கூட கொஞ்ச பழகனும்னு ஆசையா இருக்கு அவ்ளோ தான்.....இதெல்லாம் LUV இல்ல டா... " என்றான் விஜய்..

"வா டா வா...இப்புடி எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க.....???....பாபாங்கலாம்....பேசனும்னு தோனுமாம் பிடிக்குமாம் ஆன love இல்லையாம்.....கேக்குறவன் கேன பயல இருந்தா ANNA UNIVERSITY ARREAR EXAM REVALUATION FEES ILLAMA FREEனு கூட சொல்லுவீங்க டா ...  " என்றான் விவேக்

"என்ன டா EXAM எழுதுறதுக்கு முன்னாடியே ARREARனு பேசிட்டு இருக்கீங்க....என்னாச்சு டா??" என்றாள் சாதனா...

"வா நீயே இந்த கதைய கேளு...இவனுக்கு யுவஸ்ரீ பிடிச்சிருக்காம்....LUV பன்றியானு கேட்டா தெரிலனு சொல்றான்... இது என்ன ஞாயம்னு நீயே கேளு " என்றான் விவேக்

"என்ன டா ??என்ன சொல்ற?? லவ் பன்றிய??" என்றாள் சாதனா விவேக்கிடம்....


"அதெல்லாம் இல்ல சாதனா ....சும்மா பேசனும்னு தோனுச்சு அவ்ளோ தான்...இவன் ஓவரா BUILD UP பண்ணிட்டான்...." என்றான் விஜய்...


"இந்த பசங்களே இப்படிதான்...சரி ..டேய் அண்டா நாளைக்கு நம்ம விஜய் BIRTHDAY டா...என்ன SPECIAL??" என்றாள் சாதனா..


"ஆமால மறந்தே போச்சு மாப்ள....." என்றான் விவேக்..


"என்ன SPECIAL ?? ஒன்னும் இல்ல...நாளைக்கு நமக்கு கடைசி நாள் இந்த SEMESTER ...மறந்துடுச்சா?? நாளைக்கு ஊர பார்த்து போகணும்.." என்றான் விஜய்...


"ஆமா டா ரெண்டு வாரம் STUDY LEAVE ....என்ன பன்னனே தெரில....." என்று சாதனா கூறிய வேளையில்...இவர்களுடன் இணைந்தாள் யுவஸ்ரீ...


"YAY!!!! சொல்ல மறந்துட்டேன் பசங்களா...!!! யுவஸ்ரீ STUDY LEAVE எங்க வீட்ல தான் தங்க போறா....அவளுக்கு நிறைய DOUBTS இருக்குனு சொன்னா...SO ரெண்டு பேரும் GROUP STUDY பண்ண போறோம் " என்றாள் சாதனா ...


"அப்ப நாங்க தான் OUTஅ????" என்றான் விவேக்....


"எந்த DOUBT னாலும் CALL பண்ணுங்க டா.......டேய் நாளைக்கு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வாங்க ....விஜய் BIRTHDAY கொண்டாடிட்டு ஊருக்கு போலாம் " என்றாள் சாதனா...


"ஐயா JOLLY " என்று விவேக் துள்ளினான்...


சூரியனை தொடரும் சூரியகாந்தி பூவை போல யுவஸ்ரீயை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விஜயை சாதனா...


"விஜய் நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்துடு ஊருக்கு போ சரியா??" என்றாள் சாதனா...


"ஆஹ் சரி சரி " என்று சற்று பயந்து போய் கூறினான்...


"அப்போ நாளைக்கு EVENING MEET பண்ணலாம்....BYE BYE FRNDS!! ADVANCE BIRTHDAY WISHES VIJAY "
என்று கூறினாள்...

"THANKS " என்று சொல்லி யுவஸ்ரீயை பார்த்தான் விஜய் :)

"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்"............என்றது அந்த இசை ......

அடுத்த பாகம் படிக்க...
உயிர் - 12 - உறக்கத்தின் சிறைச்சாலை....




Wednesday, July 4, 2012

உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்தும்


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
உயிர் - பாகம் - 8 - இதழின் ஒரு ஓரம்
உயிர் - பாகம் - 9 - பீட்டர் பொண்ணுங்க



நால்வரும் வகுப்பறை நோக்கி நடந்துகொன்டிருந்தனர்....
" பேசுகிறேன் பேசுகிறேன் " என்று ஒலித்தது அந்த ரிங்டோன் மீண்டும்...

"நான் பேசிட்டு வர்றேன்...நீங்க போங்க " என்றாள் சற்று தடுமாற்றத்துடன் யுவஸ்ரீ..

"சரி " என்று விஜய் விவேக் சாதனா நடந்தனர்...

ஏன் யுவஸ்ரீ தடுமாறினாள் ...ஏதேனும் பிரச்சன்னையாக இருக்கோமோ என்று எண்ணிக்கொண்டே நடந்தான்...

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....

மணி அடித்த அடுத்த நொடி வகுப்பறைக்குள் நுழைந்தாள் யுவஸ்ரீ....

வழக்கம் போல பாடங்களை தாலாட்டாக பாடி அனைவரையும் உறங்க வைத்துக் கொண்டிருந்தனர் அணைத்து ஆசிரியர்களும்....

படி படியாக பொறியியல் கல்லூரித் தொழிற்ச்சாலைகளில் இயங்கும் இயந்திரமாய் மாறி விட்டனர் அனைவரும்...
ASSIGNMENT, LAB RECORD WORK , OBSERVATION SIGNATURE,....என அனைத்தும் இவர்களது உணவும் சுவாசமும் ஆகிவிட்டது....

இப்படியே நான்கு  மாதம் கழிந்தது..
நால்வரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்...
சாதனா அணைத்து உதவிகளையும் செய்து வந்தாள்...

சில சமயம் அனைவரும் சாதனாவின் வீட்டிற்கு செல்வர்...
சாதனாவின் அப்பா மிக்க நல்லவர்...
நால்வருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தார்
அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை கூறுவார்...

நால்வரும் தங்கள் வீட்டை மறந்து கல்லூரித்தாயின் மடியில் ஆனந்தமாய் விளையாட ஆரம்பித்தனர்..

நடுவில் ஒரு முறை விடுமுறையில் தன் வீட்டிற்கு சென்றான் விஜய்..
அவன் தந்தை தாய் அன்பும் அவன் ஊர் வாசமும் அவனை சொர்கத்திற்கு அழைத்து செல்வது போல உணர்ந்தான்...
ஊர் நண்பர்களுடன் நன்றாக சுத்திவிட்டு மீண்டும் கல்லூரி வர மனம் இன்றி வந்தடைந்தான்...

மூன்று INTERNAL EXAM .........

சாதனா அனைத்து பாடங்களையும் தமிழில் அவர்களுக்கு விளக்கினாள்...
ஆங்கிலத்தின் இலக்கணத்தையும் அவ்வப்போது அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாள்..

ஒரு வழியாக அனைத்து INTERNAL EXAMS நல்ல படியாக எழுதி முடித்து விட்டனர்...
சாதனா தான் முதல் மதிப்பெண் வாங்குவாள்..
மீதி மூவரும் பாஸ் பன்னி விடுவர்....
யுவஸ்ரீ  அனைத்தையும் எளிதில் புரிந்துகொள்வாள்..
ஆனால் அவளுக்கு ஆங்கிலத்தில் கையெழுத்து நன்றாக இராது....
அதனால் அவள் சற்று குறைவாகவே மதிப்பெண் வாங்கினாள்....

கையெழுத்தும் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை இன்றைய கல்வியில்......

விஜய் விவேக் சாதனா அனைவரும் நன்றாக சிரித்து ஒருவரை இருவர் கலாய்த்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் மெல்லிய சிரிப்பு மட்டுமே செய்வாள் யுவஸ்ரீ...

அனைவருடனும் ஒட்டியும் ஒட்டாதது போலவே இருந்தாள்.....

"யுவஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணு டா...ஆனா ஏன் இவ்ளோ அமைதியாவே இருக்கானு தெரில டா" என்றான் விஜய் விவேக்கிடம்....

"டேய் அவ நல்ல பொண்ணு நல்ல பொண்ணு னு ஏன்டா எதோ கொசு மருந்து விக்குறவன் மாதிரி கூவிகிட்டே இருக்க?????.......
டேய் அவல நீ LUV பன்றிய டா??? "
என்றான் விவேக்.....

அடுத்த பாகம் படிக்க

"உயிர் - பாகம் - 11 - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

Thursday, June 28, 2012

உயிர் - பாகம் - 9 - பீட்டர் பொண்ணுங்க



உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது
உயிர் - பாகம் - 8 - இதழின் ஒரு ஓரம்



"EXCUSE ME... " என்றபடி சாதனாவும் யுவஸ்ரியும் விஜயின் பின் வந்து நின்றனர்.

"HI...I AM SAADHANA...." என்று கை நீட்டினாள் சாதனா.
"ஹாய்....நான் தாங்க விவேக்..." என்று அசடு வழிய கை நீட்டினான் விவேக்
"அட உருள உன்ன தெரியாம இருக்குமா???..." என்று கூறி சிரித்தாள் சாதனா .

"என் பேரு யுவஸ்ரீ.." என்றாள் யுவஸ்ரீ..
"என் பேரு விஜய்.." என்றான் விஜய்

"சரி சரி.,..நம்மலா இனிமேல் ஒரே GANG...உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் நான் செய்வேன்....எந்த டவுட்னாலும் ASK ME...I"LL HELP YOU :) " என்றாள் சாதனா..

"டேய் மச்சான் பிச்சகாரிய நம்பலாம்...ஆனா பீட்டர் விடற பொண்ண மட்டும் நம்பக்கூடாது டா" என்று முணுமுணுத்தான் உருளை (விவேக்)

"நீ மொதல்ல இந்த உருளையோட friendshipa கட் பண்ணு ....THEN ONLY IT WILL BE GOOD" என்றாள் சாதனா

"சரி சரி ரெண்டு பேரும் சண்டைய நிறுத்துங்க...எனக்கு பசிக்குது...சாப்பிட வாங்க...." என்று சொல்லி CANTEEN நோக்கி நடக்கதொடங்கினான் விஜய்..

மூஞ்சை சுளித்துக்கொண்டு சாதனாவும் விவேக்கும்.....மெல்லிய சிரிப்புடன் விஜயும் யுவஸ்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நடந்தனர்..
.
நால்வரும் சாப்பாடு வாங்கிக்கொண்டு அமர்ந்தனர்....
"இங்க பாருங்க ...நம்ம அந்த JAILORகு நாம யாருன்னு காட்டனும்....SO.."
என்று சாதனா இழுக்க....

"அவரு முன்னாடி போய் நின்னு நாம யாருன்னு சொன்ன நாம யாருன்னு தெரிய போகுது...இதுக்கு என்னத்த பெருசா PLAN பண்ணிட்டு இருக்க???"
என்றான் வாயில் அப்பளத்தை மொக்கியவாரு கூறினான்

"மூட்ரா வாய...COMING INTERNALSல ரெண்டு பெரும் CLASS FIRST MARK வாங்கணும் எந்த HELP வேணாலும் தயங்காம கேளுங்க..." என்றாள் சாதனா

"ரொம்ப THANKS" என்று விஜயும் யுவஸ்ரியும் ஒரு குரலில் ஒன்றாய் கூறினார்...

"பாருங்கடா UNITYA" என்று சாதனா சிரித்தாள்...

அடுத்த பாகம் படிக்க
உயிர் - பாகம் - 10 - கையெழுத்தும் தலையெழுத்து

Saturday, June 23, 2012

உயிர் - பாகம் - 8 – இதழின் ஒரு ஓரம்




உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது






“உங்களுக்கு எங்கள விட அனுபவம் ஜாஸ்தி ...நிறையா படிச்சிருக்கீங்க....எங்கள நல்ல படிங்கனு என்கரேஜ் பண்ணுங்க சார்.....உயிரை வாங்குறோம் அப்புடி இப்புடினு திட்டாதீங்க சார்...எங்களுக்கு இருக்குற கொஞ்ச நம்பிக்கையும் போயிரும் சார்... என்று தாழ்மையுடன் கூற வகுப்பே மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது....
அனைவரும் JAILOR என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்த வேளையில் ஒலித்தது அந்த மணி J...
HOW DARE YOU TALK LIKE THIS TO ME???....YOU HAVE TO STUDY BY YOURSELF….SHOW YOUR TALENT IN COMING INTERNAL EXAM …DON’T SHOW IN SPEECH…. என்று கோபத்தில் கத்திவிட்டு கையில் இருந்த CHALKPIECEஐ தூக்கி எறிந்துவிட்டு சென்றார்....
“டேய் உனக்கு ஏன்டா இந்த பொழப்பு???? பேசாம இருக்க வேண்டிதான?? ஏன்டா அவருக்கு அட்வைஸ் பன்னி பிரச்சன பண்ற?? ” என்றான் விவேக்
“டேய் போடா...இதெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது...எனக்கு தோனுச்சு சொன்னேன்...என்ன பன்னுவார்னு பாக்கலாம்..” என்று கூறிவிட்டு யுவஸ்ரியை நோக்கினான் விஜய்....
இன்னும் அழுதுகொண்டே இருந்தாள் யுவஸ்ரீ...
சட்டென்று எழுந்து யுவஸ்ரீ அருகே சென்றான் விஜய்..
“என்னங்க நீங்க அவரு சொல்றதுக்குலா போய் பீல் பண்ணிட்டு இருக்கீங்க....நீங்க எவ்ளோ நம்பிக்கையா பேசுனீங்க....இப்ப இப்புடி அழுறீங்க..மொத நாளே இப்புடி அழலாமா???.” என்று கூறினான் விஜய்..
அவள் விஜயின் பேச்சை கேட்டாவாறு கண்களை துடைத்தாள்...
“அப்போ ரெண்டாவது நாள் அழலாமா???” என்று கலைத்துவிட்டதாக எண்ணி சிரித்துக்கொண்டான் விவேக்..
அழுகையில் புதைந்து போன அந்த போன பொன் சிரிப்பு மெலிதாக பூத்தது அவள் உதட்டில்...
புத்த புன்னகை மலர் விஜயின் மனதில் காதல் மணத்தை பரப்பியது...
இருவரும் புன்னகை பரிமாற்றதுடன் விடைபெற்றுக்கொண்டனர்...
“இதழின் ஒரு ஓரம் சிரித்தாள் அன்பே..” என்று பாடிக்கொண்டே விஜயை பார்த்தான் விவேக்...
வெட்கம் கொட்ட சிறித்து தள்ளினான் விவேக்...:)
“பாருடா வெட்கத்த.....” என்று ஓட்ட ஆரம்பித்தான் விவேக்...
இருவரும் மதிய உணவு கொள்ள வெளியேறினர்....
EXCUSE ME……………


அடுத்த பாகம் படிக்க.....
உயிர் - பாகம் - 9 - பீட்டர் பொண்ணுங்க

Friday, June 1, 2012

உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது



உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM
உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்




"SIR எதாச்சு ஒரு பெயர குறிக்குற WORDSகு பேர் NOUN " என்று தமிழில் தெளிவாக பதில் சொன்னாள் யுவஸ்ரீ..
"WHAT ???? பேர குறிக்குற சொல்லா??" என்று ஆங்கிலேயர் தமிழில் கத்தினார்...
"DONT YOU KNOW TO SPEAK IN ENGLISH??? WHERE DO YOU THINK YOU ARE??? " என்று  கத்தினார்..
"மாப்ள சொன்னேன்ல உன் ஆள் செத்தா டா.. " என்று முணுமுணுத்தான் விவேக்.
"சும்மா இரு டா அவ கரெக்டா தான் சொன்ன ....அந்த ஆளு தான் ENGLISH ல சொல்லலனு திட்ராறு..." என்று சொன்னான் விஜய்.
"SIR நான் தமிழ் MEDIUM.. எனக்கு ENGLISH பேச வராது...சீக்கிரமா கத்துகுறேன் SIR" என்று ஒரு நம்பிக்கையுடன் தெளிவான பார்வையுடன் பார்த்தாள் யுவஸ்ரீ..

"என்னது போக போக கத்துகுரியா??? என்ன LKGயா படிக்குற??? போக போக படிக்குறதுக்கு...ENGINEERING ...YOU CANT STUDY ENGINEERING WITHOUT KNOWING ENGLISH...HMMM...TAMIL MEDIUM படிச்சுட்டு இங்க வந்து எங்க உயிரை வாங்குறது..." என்று கத்தினார்...

சும்மா சத்தமா பேசுனாலே அழுதுருவாங்க இந்த பொண்ணுங்க...
ஏங்கி ஏங்கி அழ தொடங்கிவிட்டாள் யுவஸ்ரீ..

"இந்த பொண்ணுங்களே இப்புடித்தான் டா ...சும்மா அழுற மாதிரி SCENE போட்டு தப்பிசுடுவாங்க" என்றான் விவேக்
"டேய் JAILORகிட்ட அழுதுலாம் தப்பிக்க முடியாது" என்றான் முன்னால் அமர்ந்திருந்த வினோத்.

"HEY WHAT ARE YOU THINKING ...YOU DONT KNOW ENGLISH ..IF I TELL THAT YOU WILL BE CRYING??? SHUT UP YOU IDIOT...STOP CRYING AND SIT DOWN...ITS ALL YOUR FATE....I NEED GOOD MARKS IN EXAM THATS IT..." என்று கோவமாக கத்தினார் JAILOR

அழுதுகொண்டே அமர்ந்தாள் யுவஸ்ரீ....

அவள் அழுகை நனைத்தது அவளது கை குட்டை மட்டும் அல்ல ...விஜயின் இதயத்தையும் தான்...

அவள் அழுததை பார்க்க முடியவில்லை விஜயால்...
"டேய் இவரு பேசுறது சரி இல்ல டா...,இப்புடிலா பேசகூடாது டா.. " என்றான் விஜய்..
"உன் ஆள சொன்ன உனக்கு கோவம் வரத்தான் செய்யும்.. ஆனா உன்னால என்ன டா பண்ண முடியும்...சும்மா பேசாம இரு...அப்புறம் உண்ட கேட்டு உன்னையும் அழ வைக்க போறாரு.." என்றான் விவேக்

"SHUT UP!! GUYS IN THE LAST BENCH...WHAT ARE YOU SPEAKING???GET UP YOU TWO.." என்று கூறி தன் கையில் இருந்த CHALKPIECEஅ தூக்கி எறிந்தார்...

திடுக்கிட்ட இருவரும் மெதுவாக எழுந்தனர்...

"செத்தோம் டா!!" என்று முணுமுணுத்தான் விவேக்...
"WHAT ARE YOU DOING??" என்று கேட்டு அருகில் வந்தார் JAILOR
"SIR...அது ஒன்னும் இல்ல SIR...அவ கரெக்டா சொன்னான்னு சொன்னான் SIR"  என்று பதட்டத்தில் ஓலரிவிட்டான்..

"உனக்கு அவ்ளோ தெரியுமா??? கரெக்டா சொல்றது முக்கியம் இல்ல ENGLISHல சொல்லணும்....அதான் முக்கியம் ENGINEERING படிக்க.."
என்றார் JAILOR

"SIR...நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னு சொல்லட்டா?"
என்றான் விஜய்...

சடாரென்று வகுப்பில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர்...


அடுத்த பாகம் படிக்க
உயிர் - பாகம் - 8 – இதழின் ஒரு ஓரம்

Friday, May 25, 2012

உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்
உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM





அமைதி பரவிய அந்த வகுப்பறையில் அனைவரும் விஜயை உற்று நோக்கி விட்டு பின் அவரவர் வேலையை தொடர்ந்தனர்....

"ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க டா...நானும் ENGLISH படிச்சிருக்கேன்.....உனக்கு TAMIL எந்த அளவுக்கு தெரியுமோ அந்த அளவுக்கு எனக்கு ENGLISH தெரியும்....தமிழ் நாட்ல இருக்குற எனக்கு தமிழ் நல்ல தெரிஞ்ச போதும் டா...சும்மா ENGLISH ENGLISH பேசாதீங்க டா....JAPAN நாட்ல இருக்குறவனுக்கு நம்மல விட ENGLISH கம்மியாத்தான் தெரியும்...ஆனா அங்க தான் டா பயங்கரமா முன்னேறி இருக்காங்க..எப்புடி பேசுரோம்குறது தான் டா முக்கியம் ...எந்த மொழி னு இல்ல...." என்று கூறி தமிழ் பெருமூச்சு விட்டான் விஜய்...

"எப்பா சாமி ...போதும் டா...ஏன்டா எங்கள எல்லாம் வில்லனாக்குற??? சும்மா கலாய்ச்சோம்டா..பெருசா எடுத்துக்காத டா...SORRY ...நம்மலா ஒரே CLASS டா..." என்று கூறி தோழமையோடு தட்டினான் விஜயின் தோளில் முன் அமர்ந்திருந்த அர்ஜுன்....

"டேய்...அப்புடியே உனக்கு ஒரு CHARACTER குடுத்தாலும் VILLANல இல்ல... உனக்கு COMEDIAN தான்.." என்று கூறி குலுங்கி சிரித்தான் விவேக்...

"டேய்..புடிங்க டா அந்த அண்டாவ..." என்று கத்தி சற்று கூச்சலுடன் ஆரவாரத்துடன் கத்திக் கொண்டிருந்தனர்....

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என BELL ஒலிக்க மீண்டும் மயான அமைதி நிலவியது....
"ஏன்டா இவ்ளோ அமைதியாயுடீங்க திடீர்னு??????" என்று சற்று அமைதியான குரலில் கேட்டான் விவேக்..

"டேய் அண்டா அமைதியா இரு ...இப்ப ENGLISH CLASS......JAILER வருவாரு..." என்றான் முன் இருந்த அர்ஜுன்...

"JAILERஅ?? யாரு டா?" என்றான் விஜய்...

"டேய்..அவரு தான் டா நம்ம ENGLISH PROFESSOR...ரொம்ப STRICT ...அவருக்கு நம்ம SENIORS வெசிருக்குற பேரு JAILOR..." என்றான் அர்ஜுன்...

அனைவரும் எழுந்தனர்....அர்ஜுன் சொன்னது போல கையில் கம்பாக ஆங்கில புத்தகத்தை ஏந்திக்கொண்டு மூக்கில் வழுக்கி விளையாடும் கண்ணாடியுமாக கன்னத்தில் சிறு மருவுடன் ஒரு JAILOR போன்றே தோற்றமளித்தார் பேராசிரியர் பாலன்..

"GOOD MORNING EVERYONE...LETS NOT WASTE THE TIME BY INTRODUCING EVERYONE...WE WILL KNOW EACH OTHER WHEN THE COURSE GOES ON...." என்று கூறி கரும்பலகை அருகில் சென்றார்...

"என்னடா இவரும் நம்ம பேர கேட்டு ஒட்டிடுவார்னு பார்த்த என்னமோ GOES ON அப்புடி இப்புடின்னு சொல்றாரு...அப்புடின என்னது டா?? " என்றான் நமது அண்டா..

"ஹ்ம்ம்...உன்ன பத்தி தெரிஞ்சு நேரத்த WASTE பண்ண வேணாம்னு சொல்றாரு....மூஞ்ச பார்த்தே தெரிஞ்சுகுவாராம்...." என்றான் விஜய்..

NOUN ...இதுவே JAILOR (பேராசிரியர் பாலன்) எழுதிய வார்த்தை....

"YES ...N-O-U-N ...NOUN...WHAT IS MEANT BY A NOUN???" என்று கூறி தன் மூக்கில் வழுக்கிய கண்ணாடி வழியாக கழுகு பார்வை பார்த்து யுவஸ்ரீயை நோக்கி கை நீட்டினார்...

திடுக்கிட்ட யுவஸ்ரீ ஆந்தை போல முழித்தாள்...

"டேய் மாப்ள உன் ஆள் செத்தா டா" என்றான் அண்டா
"போடா டேய் அவ நல்ல பொண்ணு...பாரு கண்டிப்பா பதில் சொல்லிடுவா..."
என்றான் விஜய்...
"அப்போ உன் ஆள்னு ஒத்துகுரியா?? " என்றான் முன் இருக்கையில் அர்ஜுன் அருகில் அமர்ந்திருந்த வினோத்...
"டேய் சும்மா இருங்க டா....அவரு பார்துற போறாரு.." என்றான் விஜய் சிறிய வெட்கம் உதிக்கும் சிரிப்புடன்...<3
....

"WHAT THE HELL ARE YOU DOING??? TELL ME THE ANSWER....WHAT IS MEANT BY NOUN???" என்று கத்தினார் பாலன்....

"SIR....

அடுத்த பாகம் படிக்க..
உயிர் - பாகம் - 7 - அழுகை நனைத்தது



Sunday, May 20, 2012

உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்







அருகில் வந்த ராகவன் "நீ தமிழ் MEDIUM SCHOOL ல இருந்து வரியா ??" என்றார் .
"ஆமா SIR " என்று தயக்கத்துடன் கூறினாள் .

"இங்க பாரு மா... நீ தமிழ்ல படிச்சு வந்திருக்கலாம் ஆனா இங்க எல்லாம் ENGLISH தான்...போக போக கத்துக்கணும்....இல்லான நல்ல வேலைக்கு போக முடியாது ...புரிஞ்சதா??? " என்றார் ராகவன்.

"சரி SIR" என்றாள் யுவஸ்ரீ .
"டேய் அவளும் தமிழ் MEDIUM டா...கலக்கு " என்று சற்று கத்தி பேசிவிட்டான் விவேக்.

"WHO IS THAT SPEAKING IN MY CLASS ???" என்று கூறி விவேக்கை நோக்கி பார்த்தார் ராகவன்.

"SORRY SIR" என்றான் விவேக் .
"WHAT IS YOUR NAME ?/ INTRODUCE YOURSELF.." என்றார் ராகவன் .
"என் பேரு விவேக் சார் ... ஊர் உசிலம்பட்டி..." என்றான் விவேக்..

"இங்க பாருங்க டா உசிலம்பட்டி உருளை .." என்று ஒருவன் COMMENT அடித்தான்..
"SILENCE" என்றார் சிறிது கோபத்துடன் ராகவன் ..

"இங்க எத்தன பேரு தமிழ் MEDIUM??? GET UP " என்றார் ராகவன்..

விவேக் , விஜய் , யுவஸ்ரீ போக இன்னும் நான்கு பேர் எழுந்தனர்...

தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்த உயிர்கள் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை...
என்று எண்ணிக்கொண்டான் விஜய்..

"இங்க பாருங்க...தமிழ் நமக்கு தாய் மொழி தான்.... ஆனா அதுக்காக நான் ENGLISH படிச்சது இல்ல....படிக்க பிடிக்கல ..... எனக்கு புரியாது.... நம்மால முடியாதுனு நெனைக்க கூடாது ...YOU CAN DO ANYTHING IF YOU TRY ...OK? ஒழுங்கா முயற்சி பண்ணீங்கன்ன " என்ன வேணும்னாலும் பண்ணலாம் ....OK?
" என்றார் ராகவன்...

"OK SIR" என்றனர் அனைவரும்...

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்....

"OKAY STUDENTS....TOMORROW WE WILL SEE THE LESSONS..." என்றார் ராகவன்..
அனைவரும் எழுந்து நின்றனர்....

மீண்டும் அந்த சலசலப்ப்பும் கலகலப்பும் நிறைந்த சந்தை ஆனது அந்த வகுப்பறை...
"இவரு நல்ல பேசுறார் டா...நல்லா பாடம் நடத்துவார்னு தோணுது" என்றான் விவேக்...

"டேய் தமிழ் புலவர்களா....சொல்லுங்கடா உங்கள பத்தி..." என்றான் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுன்...

"என் பேர் விவேக் இவன் பேரு விஜய்...ரெண்டு பெரும் உசிலம்பட்டி பக்கத்துல இருந்து வர்றோம்..." என்றான் விவேக்..

"அதான் உங்க மூஞ்சிலே எழுதிருக்கே..." என்றான் அர்ஜுன்...அனைவரும் சிரித்தனர்...

கோபம் கொண்டான் விஜய்.....
"டேய் ..." என்று கத்தினான்.....அமைதி பரவியது வகுப்பில்...

அடுத்த பாகத்தை படிக்க...

உயிர் - பாகம் - 6 - JAILOR பாலன்



Thursday, May 17, 2012

உயிர் - பாகம் 4 - தமிழில் அறிமுகம்


உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்





விஜய் பார்த்த அந்த முதல் கண்கள் யுவஸ்ரீயின் கண்கள். பார்த்ததும் சிறிய பூரிப்புடன் தயக்கத்துடன் உதட்டை வளைத்தான். அவள் சற்று பயந்து தலை குனிந்தாள் . ஏமாற்றம் அடைந்த விஜய் விவேக்குடன் வகுப்பிற்குள் சென்று கடைசி பெஞ்ச்சில் அமர்ந்தான் . அவளோ முதல் பெஞ்சு . 

"என்னடா அவ போன் எடுத்து கொடுத்திருக்கோம். கொஞ்சம் சிரிச்ச என்ன டா?? என் டா இப்புடி இருக்காங்க??" என்றான் விஜய் விவேக்கிடம் .

"ஆமா இவரு பெரிய கமல ஹாசன்.இவர பார்த்ததும் சிரிக்கணும். விடரா இந்த பொண்ணுங்களே இப்படித்தான்" என்றான் விவேக் .

சலசலப்பும் கூச்சலும் நிறைந்த அந்த வகுப்பறையில் திடீர் அமைதி. அனைவரும் எழுந்து நின்றனர் .அப்போது தான் வகுப்பிற்குள் நுழைந்தார் பேராசிரியர் ராகவன் . நல்ல இளமையான தோற்றத்துடன் தோன்றினார் அவர்.

"GOOD MORNING  MY DEAR STUDENTS!!! I AM RAGHAVAN. YOUR MATHS PROFESSOR. I HAVE FINISHED M.PHIL MATHEMATICS. I HAVE FIVE 5 YEARS OF EXPERIENCE. I"LL BE YOUR MATHS PROFESSOR FOR TWO SEMESTERS . இன்னைக்கு மோதல் நாள் இன்னைக்கே SUBJECT போக வேணாம். LET ALL OF YOU INTRODUCE ABOUT YOURSELF ". என்று தன் முன்னுரையை முடித்தார் ராகவன் .

"மாப்ள என்னடா மொத நாளே எதோ ENGLISH படம் பார்த்த மாதிரி இருக்கு...எப்புடி டா சமாளிக்க போறோம்???" என்றான் விஜய்.
"சும்மா இரு டா..எவனாவது எதாவது சொல்லுவான். அத பார்த்து அப்புடியே சொல்லிடுவோம்.."என்றான் விவேக் ."ஏன்டா TAMILல பேச கூடாத???" என்றான் விஜய் ..

"GOOD MORNING! I AM SAADHANA . I AM COMING FROM CHENNAI . I HAVE SECURED 1105 IN TWELFTH STANDARD. " என்று மூச்சி விடாமல் பேசினாள் முதல் பெஞ்சில் யுவஸ்ரீக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சாதனா .

"GOOD AND NEXT " என்றார் ராகவன் .
"மாப்ள உன் ஆள் டா" என்று கூறி சிரித்தான் விவேக்.
"சும்மா இரு டா அண்டா" என்று கூறினான் விஜய்

"என் பேர் யுவஸ்ரீ . நான் மதுரை ல இருந்து வர்றேன் . நான் 12TH ல 1139 மார்க் வாங்கிருக்கேன் ." என்று செந்தேன் சொட்ட தமிழில் தன்னை அறிமுகம் செய்தாள் யுவஸ்ரீ .

அவள் தன் உரையை முடித்ததும் சிறிது கிண்டல் சிரிப்பும் சலசப்பும் பரவியது .
"SILENCE" என்று கத்தினார் ராகவன் .

தன் இருக்கையில் இருந்து எழுந்து யுவஸ்ரீ அருகில் சென்றார் ராகவன் .....

அடுத்த பாகம் படிக்க...

உயிர் - பாகம் 5 - தமிழ் MEDIUM

Saturday, May 12, 2012

உயிர் - பாகம் 3 - முதல் பார்வை

உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை
உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்




"டேய் போன் எடுத்து பேசு டா" என்றான் விவேக்...
"ஹலோ!! " என்றான் விஜய்.
பேசுகிறேன் பேசுகிறேன்-- அந்த பாடலின் குரலை விட இனிமையான குரலில் "ஹலோ !! SORRY நீங்க வெச்சிருக்க போன் என்னோடது...
அது என் BAG ல இருந்து விழுந்துருச்சு....நீங்க எங்க இருக்கீங்க?" என்று கேட்டது..
மிகுந்த தயக்கத்துடனும் தடுமாற்றதுடனும்..."அப்புடியாங்க...நான் இப்ப FIRST YEAR CLASS பக்கத்துல இருக்கேன்...நீங்க வேன வந்து வாங்கிக்கோங்க..." என்றான்..
"ரொம்ப ரொம்ப THANKS ...நான் இப்ப உடனே வர்றேன்..." என்று சொன்னது அந்த குரல்...
அத்துடன் தொடர்பு துண்டிக்க பட்டது...
."மாப்ள யாருட பொண்ணா????" என்றான் விவேக்...
"டேய் எப்புடி டா கண்டு புடிச்ச???" என்று விஜய் கேட்டதற்கு...
"தம்பி நீ ஹீரோ ஆனா நான் காமெடியன்...உங்கள பத்தி எனக்கு தெரியாத டா???...மொத நாளே நம்பர் கிடைச்சிருச்சு...கலக்கு டா" என்று ஓட்டித்தல்லுகிறான் விவேக்...
"டேய் சும்மா இரு டா...மொதல்ல அந்த பொன்னுட்ட குடுத்துட்டு CLASS போனும்.. " என்று கூறிக்கொண்டு நடந்தான் விஜய்....

இருவரும் FIRST YEAR CLASS பக்கத்துல நின்றுகொண்டிருந்தார்கள்...
லேசான தென்றல் வீச வெள்ளை சுடிதாரில் தேவதையாய் பறந்து வருகிறாள் யுவஸ்ரீ...:)....
தயங்கி தயங்கி விஜய்யிடம் வந்து "என் மொபைல் போன் உங்க கிட்ட இருக்கா???" என்றாள் அந்த மெல்லிய குரலில்..
."ஹலோ யாருங்க நீங்க ?? எதுக்கு இவன்ட வந்து உங்க போன் கேக்குறீங்க???உங்க பேர் என்னங்க ???" என்று அவன் மொபைல திருடியது போல குமுரினான் விவேக்..
"இல்லங்க என் மொபைல் தொலஞ்சுடுச்சு...அத ஒருத்தர் இங்க வந்து தர்றேன்னு சொன்னாங்க அதான் கொஞ்சம் கொலம்பிடேன்...SORRY " என்று பயத்துடன் கூறினாள்....
"என்னங்க SORRY ??? மொதல்ல உங்க பேர சொல்லுங்க... " என்று சிறிது உரக்க கூறினான் ..."சும்மா இருடா..." என்று கத்தினான் விஜய்...
பயந்து போய் திரு திரு என்று முழித்தாள் யுவஸ்ரீ..."அவன விடுங்க...இந்தாங்க உங்க போன்....நான் தான் எடுத்து வெச்சிருந்தேன்"...என்று பணிவயுடன் சொன்னான் விஜய்..
"ஒ!! ரொம்ப நன்றிங்க ....நான் ரொம்ப பயந்துட்டேன்...ரொம்ப ரொம்ப THANKS"
என்று கூறிக்கொண்டே சென்றாள்...
"என்னடா மாப்ள பேர கூட சொல்லாம போய்டா???" என்று கவலைப்பட்டான் விவேக்...
"டேய் அதான் THANKS சொன்னால அது போதும்...வா டா CLASSKU நேரமாச்சு ..." என்று கூறிக்கொண்டு இருவரும் தங்கள் வகுப்பிற்குள் நுழைந்தனர்...
நிமிர்ந்து பார்த்த விஜய் திடுக்கிட்டான்...




அடுத்த பாகத்தை படிக்க..

உயிர் - பாகம் 4 - தமிழில் அறிமுகம்





Friday, May 11, 2012

உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை





உயிர் - பகுதி 1.....கல்லூரிக் கருவறை



கருகிய மேகம் சூழ்ந்த காற்று வீசும் காலைப் பொழுதாய் அமைந்தது விஜய் கல்லூரி செல்லும் முதல் தினம்.,....
கல்வியை முதலாக கொண்டு பணம் சம்பாதிக்கும் தலை சிறந்த பொறியாளர் உற்பத்தி செய்யும் கல்லூரித் தொழிற்சாளைகளில் அதுவும் ஒன்று....
சாதாரண மாணவானாய் பற்பல கனவுகளுடன் தன் குடும்ப சுமையையும் சுமந்து நடக்கிறான்...அந்த நகர சூழ்நிலை அவன் கண்களுக்கு நரகமாய் தெரிந்தது....
நிமிடத்துக்கு நிமிடம் பறக்கும் கார்கள், வண்டிகள் , ஒருவரை ஒருவர் நெரித்து தள்ளுதல், அனைவரும் பணம் என்ற அன்பில் பிணமாக வாழ்வதை கண்டு வியக்கிறான்....
அவனது சொந்தங்களோ விவசாயியான அவன் தந்தையின் வியர்வையும் அவன் அன்னையின் அளவில்லாத அன்பும்....
முதல் நாள் கல்லூரி ...இயல்பான தயக்கத்துடன் காலை உணவு கொள்ள CANTEEN செல்கிறான்...
ஒரு 100 ரூபாய் நோட்டை நீட்டி "நான்கு இட்லி" என்றான்....
"தம்பி மொத நாள் காலங்காத்தால நோட்டை நீட்டுனா சில்லறைக்கு நா எங்க போவேன்..சிலரை இருந்த கொடு இல்ல கெளம்பு" என்றான்
சில்லறை இன்றி உணவு கூட தர மறுக்கும் மாந்தருக்கு நடுவில் சில்லறை இன்றி வாரி வழங்கும் தன் ஊர் மக்களை எண்ணினான்.....
என்ன செய்வதென்று தெரியாது நின்று கொண்டிருந்த அந்த வேளையில் தான் அந்த கை நீட்டியது....
"அவனுக்கும் சேர்த்து கொடுங்கள்" என்றது அந்த குரல்.....

:):)



அடுத்த பகுதியை படிக்க...

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்



உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்

உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை



உணவில் கூட உதவி செய்யாத உலகில் உதவிக்கு நீட்டும் கரத்தை கண்டு
வியந்து நிமிர்ந்து பார்க்கிறான்....
பார்த்ததும் காதல் போல பார்த்ததும் நட்பு....
இரண்டு அண்டாவை கவுத்தி வைத்து ஒரு சொம்பை தலையாக வைத்த உருவமாய் வந்து நின்றான் விவேக்...
சற்று அதிர்ந்தே பார்த்தான் விஜய்...
"என்ன பார்க்குற ??? ஒரு ஆளுக்கு ஒரு டோகேன் தான் தராங்க அதான் உனக்கும் சேர்த்து வாங்கி நான் சாப்பிடலாம்னு நெனச்சேன்.....வாங்கிட்டு வா அங்க போய் உட்காரலாம்..."
இருவரும் நல்ல இடத்தில் காற்றாடிக்கு அருகில்அமர்ந்தனர்...
விஜய் விவேக் உண்பதை பார்த்து கொண்டே இருந்தான்...
"அப்புடி பார்க்காத அப்புறம் என் வயித்துல ஒட்டாது...இந்தா நீயும் சாப்பிடு" என்றான்....
இருவரும் தங்களை பற்றிய வரலாறுகளை பகிர்ந்து கொள்கின்றனர்....
"டேய் நம்மலா கிராமத்துல இருந்து வர்றோம்...இங்க எல்லாரும் நம்மட்ட நல்லா பேசுவான்களா டா????" என்றான் விவேக்.....
"அதெல்லாம் பார்த்துக்கலாம் மாப்ள....அன்பா பழகுனா எல்லாருக்கும் புடிக்கும் டா" என்றான் விஜய்...."ஐயோ!! டேய் இப்புடி தத்துவம் பேசுனா எவனும் மதிக்க மாட்டான் டா...என்ன கொடும காத்திருக்கோ இன்னைக்கு classல..."
இருவரும் வகுப்பிற்கு செல்கின்றனர்....
திடீர் என்று விஜய் கால் தடுமாற கீழே பார்க்கிறான்...
ஒரு மொபைல் போன்....
"டேய் காலேஜ் வந்த மொத நாளே இப்புடி ஒரு நல்ல மொபைல் கிடைச்சிருக்கு டா உனக்கு" என்றான் விவேக்
"சும்மா இரு டா...யார் இதுன்னு தெரிலயே டா..." எம்று சுத்தி முத்தி பார்த்தான் விஜய்....
திடீரென்று அந்த மொபைல் போன் ஒலித்தது "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்..." என்று ஒலித்தது அந்த ரிங்டோன்..


அடுத்த பாகத்தை படிக்க...