Showing posts with label தாய் மொழிக் கவிதைகள். Show all posts
Showing posts with label தாய் மொழிக் கவிதைகள். Show all posts

Wednesday, October 12, 2016

கண்ணாடி முன்

காலை எழுந்து கடவுளாய் தாயை தந்தையை வணங்கியவனை கண்டேன்...
பக்கத்துக்கு வீட்டில் சின்ன குழைந்தை கண்டு சிரித்தவனை கண்டேன்...
பசி என்று ஏங்கி வாசலில் நிற்பவனின் பசி போக்கியவனை
கண்டேன்
நடு ரோட்டில் கிடக்கும் கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தியவனை
கண்டேன்...
சக ஊழியர் சோகம் கேட்டு ஆறுதல் கூறி அரவனைத்தவனை
கண்டேன்...

வீட்டை சுற்றி மரம் வளர்த்து பாசத்தோடு தண்ணீர் ஊற்றியவனை
கண்டேன்..
அதிகம் ஆசையின்றி ஆத்திரமின்றி ஆணவமின்றி
அதிகம் அன்பும் அரவணைப்பும் அமைதியும் கொண்டவனை
கண்டேன்...
அவனை கண்டு அனைவரும் அவ்வாறே வாழ்வதை கண்டேன்...
சட்டென்று விளித்துக்கொண்டேன்..
கனவென அறிந்து 

“இப்படி பட்ட மனிதரெல்லாம் கனவில் தான் வாழ்வார்கள்
என்று சொல்லி கொள்கின்றேன்
கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துக்கொண்டே !!”


அன்பு அமைதி அரவணைப்பு அறிவு
இவை யாவும் கனவில் அன்றி
தன்னில் தான் இருக்கிறது !!




Saturday, December 14, 2013

வேண்டும் !!



உன் விழியில் வழுக்கி
கண்ணில் கவிழ்ந்து கன்னக் குழியில் விழ வேண்டும்

உன் இதயம் இயற்றும்
இலக்கியத்தில் 
வார்த்தைகளாக வேண்டும்

உன் கனவுகள் உரைக்கும்
உரைநடையில் நான்
கட்டுரையாக வேண்டும்...

இந்தக் வரிகளில் 'உன்' 
என்பதுன் உன் பெயராக
இருக்க வேண்டும்!!!

இதயங்கள் ஊனமானதோ????




மனிதனின் மலர்ச்சியாக...

மனதின் மண்வாசனையாக...

அன்பின் அடையாளமாக...

இயற்கையின் இலக்கணமாக...

சமுதாயத்தின் சின்னமாக...

கதைகளின் கருத்தாக...

அழகின் அளவுகோலாக...

காதலின் கண் மையாக....

இதயத்தின் மொழியாக
விளங்கும்

கவிதையே !!

உன்னை மறந்து

இதயங்கள் ஊனமானதோ????

:(

Thursday, November 7, 2013

உன் மணமேடையில்.....



கரம் கோர்த்தேன்
தோழ் சாய்ந்தேன்....
கனவு கோட்டையில்

உன் சிரிப்பை
யாசித்தேன்
இன்றும் அதை தான்
ரசிக்கிறேன்
உன் மணமேடையில்.....


இதயத்தின் ஒலியை ஒலிபெருக்கிய
உதடுகள்...
என் காதல் சொல்லும் போது
மின் வெட்டு நேரமோ????

உனது கண்கள் பாடிய
தாலாட்டில்...
காதல் தூக்கம் கொண்டது
இதயத்தில்....
எழுப்பியது கெட்டிமேளம்
உன் மணமேடையில்.....

Friday, March 22, 2013

இதயம் திறக்கும் சாவி...




என் இதயம் திறந்த
சாவி உன் உதட்டை திறக்க வில்லையோ???

சூரிய ஒளி பட்ட மொட்டாய்
இதழ் மலர்ந்தேன்
உன் விழி பட்ட பின்பு...

உன் சிரிப்பு ஒன்று போதும்
மின்சாரம் இன்றி நூறு ஆண்டு வாழ....

கவிதையும் மெய் பேசுதடி
உன்னை பற்றி இருந்தால்...

நீ பேச தயங்குவதேன்???

என் நண்பர்களுக்கு




கவிதை--- இருதயத்தின் இலக்கணம்
காதல்---இருதயத்தின் இலக்கியம்
நட்பு---இருதயத்தின் மொழி 

Wednesday, February 13, 2013

காதலாம் :)





நேற்று மழை துளியாய்
விழுந்த உண்மை காதல்...
இன்று உப்புக் கடலாய்
உருவானது...

மழை நீரோ வற்றியது
உப்புக் கடல் உரையுமோ???

ஆசை ஆட்சி செய்யும்
பிரபஞ்சத்தில்
காதலுக்கு வீடேது???

நேற்றைய காதலின் கொலையாளிகள்
சாதி மதம் பெற்றோர் உறவினர்கள்
இன்றைய காதலின் கொலையாளிகள்
அவனும் அவளும்...

கண்களின் காதலுக்கு
துடிப்பது இதயம்...
இறப்பதும் இதயமே....

ஒரு பூ உதிர்ந்தால்
மற்றொன்று பூக்கும் என்றாய்
காதல் என்பது பூ அல்ல
அந்த பூவின் உயிர் என்று
விளங்கவில்லையா??

புது கவிதை எழுதுபவன்
புது காதல் தேடுவதில்
ஐயமேது??

இதில் காதலர் தினம் வேறு!!!
கேட்டால் காதலாம்....



Thursday, November 29, 2012

நிறுத்த சொல்வாயோ?? நிறுத்தி செல்வாயோ??




ஒட்டியும் ஒட்டாமத்தான் போறியே
என் காதல
சொல்லியும் சொல்லாம தான் போறியே....

கண்ணாடில பட்ட மழை துளியா
தள்ளாடிப் போகுது என் உயிர் துளி தான்...

கண்ணுல பட்டது பல கண்ணு தான்
நெஞ்சுல நின்னது உன் கண்ணு தான்

சில்லென்று சிலிர்த்த மயில் தோகை
சிரிப்பை சிதறும் என் சிர்ப்பமே....

நிலவில் தொங்கும் நட்சத்திரமாய்
உன் காதில் கம்மல்
என் உயிரை போல் ஊஞ்சலாடுகிறது.....

உன் கன்னக் குழியில் 
என் கனவ தொலச்சேன்
உன் நெஞ்சு குழியில்
என் நினைவ தொலச்சேன்....

தாலாட்ட வந்த தென்றல
தாவணில தடுத்துட்ட
காற்று வீசும் வெண்ணிலவ
கண் பார்வையில சுட்டுட்ட....

பெண்ணே நீ உறங்க...
என்ன உறங்க விடாம
உன் பேர 
துடிக்கும் என் இதயத்தையும் 
நிறுத்துவேன்....

நிறுத்த சொல்வாயோ??
நிறுத்தி செல்வாயோ??

Saturday, August 4, 2012

காதில் கேட்காத காதல் கவிதை கொண்டு....





வாய் இருந்தும்
ஊமையானேன்
காதல் பேசும்
கண்களை கொண்டு....

கண்கள் இருந்தும்
குருடனானேன்
அவள் குரலை
காதில் கொண்டு....

காது இருந்தும்
செவுடனானேன்
அவள் பெயர் சொல்லும்
இதயம் கொண்டு

இதயம் இருந்தும்
உயிரற்றுபோனேன்
அவள் இதயத்தின் மீது
காதல் கொண்டு....

காதல் இருந்தும்
கலையற்றுபோனேன்
காதில் கேட்காத காதல்
கவிதை கொண்டு....

<3

Tuesday, July 10, 2012

இறந்தும் காண்பிர் இம் மண்ணை...











*முகத்தில் இருக்கும்

பொய் மனக்காதமெய் மலருக்கு மரண தண்டனையா??

வேண்டாம்!! வேண்டாம்!!

மறு வாழ்வு கொடுப்போம்!!

*நம் உலகில் மறைந்த சூரியனை

விழி அற்றோரின் உலகிற்கு அனுப்பி

ந்ற்பொழுதை விடியச் செய்து

சூரிய உதயத்தை காட்டுவோம்!!



*கல்விக் கண் திறந்து கர்ம வீரர்

ஆனர் காமராசர்

நாம் ஏன் சிலரின் கண் திறந்து

ஒரு கர்ம வீரன் ஆக கூடாது??..


* உடல் சாய்ந்துவிடலாம்

உயிர் பிரிந்துபோகலாம்

விழிகள் என்னும் படை திரட்டி

போரிடுவோம்...

இறந்தும் வெற்றி சூடுவோம்


*இயற்க்கை அண்ணை பூமியின் உயிர் மூச்சயும்

வானாத்தின் கண்ணீரையும் தந்து

விழி அற்றோருக்கு இவ்வுலகை உணர்த்துகிராள்..

அவள் வயிற்றில் பிரந்த நாம் ஏன் நம் விழி தந்து

அவர்களை அவர்களுக்கு காட்டக் கூடாது..??



*நம் இமைகள் ஒய்வு பெற்றாலும்

நம் கண்களை காக்க

காத்துக் கொண்டிருக்கிறது

பலரின் இமைகள்..



*வாழ்வில் அம்மவை கூட காணாமல்

வாழ்வே அம்மவசையாய் இருப்பவர்களுக்கு

பௌர்ணமியை கட்டுவோம்!!!



*சிலரின் முகத்தில் பூக்கள் மலரவில்லை

அதை கண்டு அதற்கு தண்ணீர் உற்ற

கண்ணீர் விட்டது என் முக மலர்

வற்றியது என் கண்ணீர்

மலரவில்லை அம்மலர்கள்..

என் உடல் விழுந்த பின்

விழும் என் முக மலர் அவர்கள் முகத்தில்

மலரும் அவர்கள் வாழ்வுஒளி மயத்தில்





தானம் செய்வீர் நும் கண்ணை

இறந்தும் காண்பிர் இம் மண்ணை...
 

Friday, June 1, 2012

உயிர்துளியா நீ???



காதலை மறைத்தும்
மறைக்காமல் தோன்றும்
மூன்றாம் பிறை நிலவா நீ??

கண்ணுக்குள் நுழைந்து
கண்முளித்ததும் களையும்
கனவா நீ??

கண்ணில் பட்டதும்
இதயத்தை சிதரச்செய்த
மழைத்துளியா நீ??

உன் நினைவால் காதல்
கயிற்றை வீசி சாகடிக்கும்
எமனா நீ??

பூவை பற்றிய பனி துளி
போல் என் உயிரை பற்றிய
உயிர்துளியா நீ???

Thursday, May 24, 2012

அவள் நினைவுகள்





எங்கும் நிறமில்லை
எதிலும் உயிரில்லை
எதுவும் புரியவில்லை...
சிறு சிறு துளியாய்
என் கண்ணீருடன் கலந்த
மண்ணின் உயிர் துளிகள்...
ஆங்காங்கே அவள் சிரிப்பது
போல் இடியுடன் வெட்டும்
வெள்ளை அரிவாள்கள்...
என் இதயம் வெடிக்கும்
வலியை உணர்கிறேன்...
சின்ன சிரிப்பு
சின்ன அழுகை
காரணம் அவள்
என்றேன்...
நிலவின் குரல்
அவள் அல்ல
அவள் நினைவுகள்
என்றது

Friday, May 11, 2012

முடிவதை மறந்து.





காகம் உண்ணுகிறது கூடி,
அன்போடு...
நாய் உண்ணுகிறது தேடி,
நன்றியோடு...
குயில் உண்ணுகிறது பாடி,
சந்தோஷத்தோடு...

மனிதனோ??

கூட மறந்து
சந்தோஷத்தை துறந்து
பாடுகிறான் ஆடுகிறான்...

தன் ஆட்டம்
பிறர் ஆட்டத்தில்
முடிவதை மறந்து.....
முடிவதை மறந்து....




பூவை யாசித்தேன்
வந்தாய் வண்டாய்...
மழைநீர் யாசித்தேன்
தந்தாய் கண்ணீர்..
சூரியனை யாசித்தேன்
சுட்டெரித்தாய் அனலாய்...
நிலவை யாசித்தேன்
மறைந்தாய் அம்மாவாசையாய்..
விண்ணை யாசித்தேன்
மண்ணாய் போனேன்...
சாவை யாசித்தேன்..

மறு முறை பிறக்கச்செய்தாய் உன் காதலால்...
பல முறை இறக்கிரேன் உன் காதலால்...

சேலைக் குடை





மணலை அரித்துசென்றாய்
என் மனதை விட்டுசென்றாய்..
உன் துளிகளில் சிரிக்கிறது
உலகம்..
ஏன் என்னை தொட மறுக்கிறாய்???
மழை சொன்னது..
"என்னால் அல்ல
எமனாலும் உன்னை தொட
முடியாது
உன் தாயின் சேலைக் குடையில்
நீ உள்ள வரை
"

தமிழ் மூச்சு





உதட்டின் முதல் ஸ்ருதி...
அம்மா

ஸ்ருதிகள் பல கற்று
வார்த்தைகள் பல பயின்று
மொழிகள் பல மொழிந்து...
"அம்மா"வின் அருமையை
அந்த சொல்லோடு மறக்கும்
குழந்தை...
வளர்கிறது ஆங்கிலத்தின் அறிவியலில்..
தேய்கிறது அன்பான பண்புகள்..
இழக்கிறது அழகான கலாச்சாரத்தை..
தொலைக்கிறது அமைதியான வாழ்வை...

எண்ணி வியந்து
தமிழை காக்க
கவிதை எழுத
வெட்க்கப்படுகிறேன்...

தமிழாகிய மூச்சை சுவாசிக்க
மறந்ததால்...
வாழ்கிறோம்
நன்றி கெட்டு..
சூழ்ச்சி தொட்டு..
சுகம் தொலைத்து..
சோகம் தொட்டு
நடை பிணமாய்...

நாம் பெருமையுடன் சுவாசிக்க கூடிய
தமிழ் மூச்சு
இன்று பெருமைகொள்ளும் அருங்காட்சியகத்தின்
முக்கிய பேச்சு...

கருணைக் கண்கள் கலங்காதா???





உழைக்கும் கரங்கள் உள்ளது முழுமையாய்..
உதவும் உன் வளைந்த கரங்களிடம் 
தோற்றுவிட்டேன்...
வசை பாடும் உதடுகள் உள்ளது உன்னதமாய்..
இசை மெட்டும் உன் பாதித்த உதட்டின் சிரிப்பில்
தோற்றுவிட்டேன்...

உடலில் ஊனத்துடன் முழுமையான
வாழ்க்கை வாழ்கிறாய்..
மனதில் ஊனத்துடன் நாங்கள் என்று
குணமடையப்போகிறோம்???

வாழ்வின் அர்த்தம் சிந்தும் உன் சிரிப்பிற்கு
கருணைக் கண்கள் கலங்காதா??

கவிதையே!! அழகாகிவிட்டாய்...

மழையே !!
குளிரால் நடுங்க வைத்தாய் என்னை
நடுங்க வைப்பாள் உன்னை...


பூவே!! 
மயக்கிவிட்டாய் உன் மணத்தால் என்னை
மயங்கப்போகிறாய் அவள் மனதால்...

இயற்கையே!!
உன் அழகை வர்ணித்தேன் நான்
அவள் அழகை வர்ணிக்க வைக்கப்போகிறாய் நீ...

நிலவே!!
ஏமாற்றிவிட்டாய் என்னை
எமாற்றவருகிறாள் உன்னை...

கவிதையே!!
நீயும் அழகாகிவிட்டாய்
அவளை பொருளாகக்கொண்டு!!




இதயத்தின் மொழியை இயற்றிய இளைஞனே...
ஆங்கிலேயரின் படையைத் துரத்திய உன் பேனா முனை .,
தமிழர்கள் வீரம் கொண்ட உன் முறுக்கு மீசை.,
கொலை வெறி இன்றி,
கவிதை வெறி கொண்ட கவிஞனே..,
விடுதலையை உணவாகக் கொண்ட,
விடுதலைச் சிறுத்தையே.,
இலக்கியத்தின் இலக்கணமே..,
நீ பெருமை கொள்ளவில்லை கவிதைகளால்.,
பெருமை கொண்டது கவிதைகள் உன்னால்.,
உன்னைக் கொன்றதால் தானோ .,
இன்றும் மதம் பிடித்து சுத்துகிறது யானைகள்.,
நீ சென்றதோடு கொண்டு சென்றாய் ,
இதய மொழியின் இலக்கணத்தை!!!

ஒரு சில நொடிகளில்





***ஐம்பத்தி ஏழு வினாடிகள்,
காத்த நீ.,
கடைசி மூன்று வினாடிகள் .,
காக்க மறந்து.,
காக்க வைத்தாய் உன் தாயை,
வாழ்நாள் முழுவதும்,
உன் மதிய உணவோடு...

***பெண்ணை மயக்க உன் .,
வண்டியால்
கோலம் போடுகிறாய்.,
சாலையில்.,
இறுதியில் நீ வென்றது.,
பெண்ணின் மனதை அன்றி.,
அவளுக்குக் கொடுத்த ரோஜாவும்.,
உன் தாயின் கண்ணீர் கதறலும்.,

" ரோட்ல figura பாக்காத.,
சுவத்துல figuraa தொங்காத., "

***விதிகளை மதியாமல்.,
வேகத் தடையை.,
வேகத்துடன் தாண்டி விரைந்தாய்.,
கடந்துவிட்டாய் உன்.,
வாழ்வை.,
ஒரு சில நொடிகளில்......